ருதுராஜ் ஆட்டமிழந்ததும் தோனி இதைத்தான் சொன்னார். அதான் அவரை நான் தடுக்கல – கோச் பிளமிங் பேட்டி

Fleming
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் முதலாவது குவாலிபயர் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இறுதி நேரத்தில் வெற்றிக்கு கடைசி 11 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய தோனி 6 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 18 ரன்கள் விளாசி சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அதுமட்டுமின்றி இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற சென்னை அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.

dhoni

- Advertisement -

சென்னை அணி வெற்றி பெற கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19வது ஓவரின் முதல் பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக 11 பந்தில் 24 ரன்கள் என்ற நிலை இருந்தது. அப்போது ஜடேஜா அல்லது பிராவோ ஆகியோர் இருவரில் ஒருவர்தான் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த வேளையில் அதிரடியாக தோனி களமிறங்கினார். இந்த தொடர் முழுவதுமே தோனி நல்ல டச்சில் இல்லை என்பதனால் தோனி களம் இறங்கியது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. மேலும் தான் சந்தித்த முதல் பந்தை டாட் பாலாக துவங்கிய தோனி அதன்பிறகு சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் அவர் மீதிருந்த விமர்சனங்களுக்கு தனது பேட்டின் மூலம் தோனி பதிலளித்துள்ளார்.

dhoni 1

இந்நிலையில் 19-வது ஓவரின் முதல் பந்தில் கெய்க்வாட் ஆட்டமிழந்து வெளியேறியதும் என்ன நடந்தது ? என்பது குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் சில தகவல்களை பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கெய்க்வாட் ஆட்டமிழந்து வெளியேறியதும் அடுத்ததாக யார் களமிறங்குவது ? என்ற விவாதம் எங்களுக்குள் இருந்தது. அந்த சமயத்தில் நான் போகிறேன் என தோனி கண்களாலே என்னிடம் கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஷர்துல் தாகூரை 4 ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கியது இதற்காகத்தான் – ரகசியத்தை சொன்ன தல தோனி

அதனால்தான் நான் அவரை தடுக்கவில்லை, பிறகு நல்ல முடிவையும் நாம் பார்த்தோம் என பிளெமிங் கூறியது குறிப்பிடத்தக்கது. போட்டிக்கு முன்பாக தோனி பயிற்சியின் போதும் அதிரடியாக விளையாடினார் என்பதால் தான் அவர் களமிறங்கும் போது நான் அவரை தடுக்கவில்லை என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement