ஷர்துல் தாகூரை 4 ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கியது இதற்காகத்தான் – ரகசியத்தை சொன்ன தல தோனி

Thakur

நடப்பு 14-வது ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் நேற்று ஆரம்பித்தன. இந்த தொடரின் முதலாவது குவாலிபயர் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிரு இடங்களை பிடித்து இருந்த சென்னை மற்றும் டெல்லி ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணியானது பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் மற்றும் ஹெட்மயர் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 172 ரன்களை குவித்தது. பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி தனது முதல் ஓவரிலேயே டூபிளெஸ்ஸிஸின் விக்கெட்டை பறிகொடுத்தது.

அதன்பின்னர் கெய்க்வாட் மற்றும் உத்தப்பா ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து இரண்டாவது விக்கெட்டிற்கு 110 ரன்கள் குவித்தனர். அணியின் ஸ்கோர் 113 ஆக இருந்தபோது உத்தப்பா 63 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் 4-வது வீரராக மொயின் அலி அல்லது அம்பத்தி ராயுடு ஆகிய இவரில் ஒருவர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சர்ப்ரைஸாக ஷர்துல் தாகூர் 4-வது வீரராக களமிறங்கினார்.

- Advertisement -

அவர் களமிறங்கியது அனைவர்க்கும் ஆச்சரியமாக அமைந்தது. இருப்பினும் அவர் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் இறுதியில் தோனி 6 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 18 ரன்கள் அடித்து அட்டகாசமாக சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து ஷர்துல் தாகூர் ஏன் 4-வது வீரராக களம் இறக்கப்பட்டார் என்பது குறித்தும் தோனி பரிசளிப்பு விழாவின் போது தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார்.

dhoni 1

இதுகுறித்து அவர் கூறுகையில் : எங்கள் அணியில் ஜடேஜாவை தவிர மற்ற யாரையும் நாங்கள் இதுவரை முன்கூட்டியே இறக்கி முயற்சி செய்து பார்க்கவில்லை. எங்கள் அணியில் 9 வீரர்கள் வரை பேட்டிங் செய்வார்கள். தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரால் கூட தங்கள் பங்களிப்பை பேட்டிங்கில் வழங்க முடியும். இன்றைய போட்டியில் உத்தப்பா ஆட்டமிழந்து வெளியேறியதும் ஒரு பேட்ஸ்மென் உள்ளே சென்றிருந்தால் முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்கலாமா என்று ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிப்பார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனியின் ஆட்டத்தை பார்த்து வியந்து போன விராட் கோலி என்ன சொல்லியிருக்காரு பாருங்க – விவரம் இதோ

ஆனால் ஷர்துல் தாகூர் அல்லது தீபக் சாகர் ஆகியோர் உள்ளே சென்றால் அவர்கள் முதல் பந்தில் இருந்தே பவுண்டரி அடிக்க செல்வார்கள். இதுபோன்ற பின்ச் ஹிட்டர்களிடமிருந்து ஒன்று அல்லது இரண்டு பவுண்டரிகள் வந்தால் கூட அது சேஸிங்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே நாங்கள் ஷர்துல் தாகூரை முன்கூட்டியே அனுப்பினோம் என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement