பாகிஸ்தான் அணி இப்படி தோற்பது உலகக்கோப்பை வரலாற்றில் இதுவே முதல் முறையாம் – வெளியான சுவாரசிய தகவல்

PAK
- Advertisement -

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது கடந்த 2016-ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இங்கு நடைபெற்று வரும் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்திய பாகிஸ்தான் அணி துவக்கத்திலேயே இரண்டு வெற்றிகளை பெற்று மிகச் சிறப்பாக இந்த தொடரை ஆரம்பித்தது.

ஆனால் கடைசியாக அக்டோபர் 12-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடந்த இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியானது அதன் பிறகு மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது. ஏனெனில் அக்டோபர் 20ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியிலும், அக்டோபர் 23-ஆம் தேதி நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இப்படி இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கனிஸ்தான் என அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியானது இந்த உலகக் கோப்பை தொடரில் ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்திருந்தது. இதன் காரணமாக 5 போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்ற நிலையில் மோசமான நிலையில் எட்டியிருந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான அணி அக்டோபர் 27-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முக்கிய போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது. அதன்படி நேற்று நடைபெற்ற முடிந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான அணியானது 270 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 271 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி தென்னாப்பிரிக்க அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இறுதிவரை போராடி தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன் முறையாக தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்து மோசமான நிலையை எட்டியுள்ளது.

இதையும் படிங்க : அவங்க தோத்தது கஷ்டமா தான் இருக்கு.. அடக்க முடியாத சிரிப்புடன் சோகத்தை வெளிப்படுத்திய கமின்ஸ்

அதோடு இதுவரை நடைபெற்று முடிந்த லீக் சுற்றுப் போட்டிகளில் அவர்கள் 6 போட்டிகளில் பங்கேற்று 4 தோல்வியை சந்தித்துள்ளதால் கிட்டத்தட்ட அவர்களது அரையிறுதி வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்த உலகக் கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி தற்போது பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement