முதல் இந்திய வீரராக ஐ.பி.எல் போட்டிகளில் இமாலய சாதனை நிகழ்த்திய கே.எல் ராகுல் – விவரம் இதோ

KL Rahul
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டியானது இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன. அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

கே.எல் ராகுல் நிகழ்த்திய இமாலய சாதனை :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடி அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 264 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக கே.எல் ராகுல் ஆட்டமிழக்காமல் 152 ரன்களையும், நிதீஷ் ராணா 91 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது 265 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியின் போது டெல்லி அணியின் துவக்க வீரராக களமிறங்கிய கே.எல் ராகுல் ஐபிஎல் போட்டிகளில் முதல் இந்திய வீரராக ஒரு இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அதாவது இந்த போட்டியில் 67 பந்துகளை சந்தித்த அவர் 16 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர் என 226 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 152 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன்மூலம் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஐபிஎல் போட்டிகளில் 150 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்களாக இதுவரை கிரிஸ் கெயில் மற்றும் மெக்கல்லம் ஆகியோர் மட்டுமே இருந்து வந்தனர்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலியிடம் இருக்கும் அந்த வெறி தான் எங்களையும் நல்லா விளையாட வைக்குது – தேவ்தத் படிக்கல் புகழாரம்

இவ்வேளையில் இந்த பட்டியலில் மூன்றாவது வீரராக கே.எல் ராகுல் இந்த 152 ரன்களுடன் இணைந்துள்ளார். அதோடு ஐபிஎல் போட்டிகளில் 150 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார். கே.எல் ராகுலுக்கு முன்னதாக அபிஷேக் சர்மா 141 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement