விராட் கோலியிடம் இருக்கும் அந்த வெறி தான் எங்களையும் நல்லா விளையாட வைக்குது – தேவ்தத் படிக்கல் புகழாரம்

Padikkal
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 34-ஆவது போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆர்.சி.பி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதிய வேளையில் இந்த ஆட்டத்தில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

விராட் கோலி குறித்து பேசிய : தேவ்தத் படிக்கல்

இந்த வெற்றியின் மூலம் இந்த 2026 ஐ.பி.எல் தொடரில் தங்களது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அடுத்ததாக 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆர்.சி.பி அணி 18.5 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 81 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 55 ரன்களையும் குவித்தனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து விராட் கோலி குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்ட படிக்கல் கூறியதாவது : என்னை பொருத்தவரை விராட் கோலி ஒவ்வொரு போட்டிக்கும் முன்னதாகவும், வலைப்பயிற்சியின் போதும் கொண்டு வரும் ஆற்றலும், தீவிரமும் மிக அதிகம். விளையாட்டில் எல்லாத்தையும் சாதித்த ஒருவர் இன்னமும் 100% அணியின் வெற்றிக்காக பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அர்ப்பணிப்புடன் விளையாடுகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : விட்டது கேட்ச் இல்ல.. மொத்த மேட்சையும் தான்.. வாஷிங்க்டன் சுந்தர் செய்த தவறு – விராட் கோலி செய்த சம்பவம்

இப்படி ஒரு வீரர் தீவிர அர்ப்பணிப்புடன் விளையாடுவதை பார்ப்பது அரிது. இந்த விளையாட்டில் அவர் காட்டும் ஆர்வமும், உத்வேகமும் தான் மற்றவர்களையும் அந்த உணர்வை நோக்கி தள்ளுகிறது. போட்டியில் நாம் விளையாடும் அணிக்காக வெற்றி பெற்று தர வேண்டும் என்று அவர் காட்டுகிற உறுதி தான் எங்களையும் சிறப்பாக செயல்பட வைக்கிறது என தேவ்தத் படிக்கல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement