14 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கிய பிரபல பாகிஸ்தான் வீரர் – FIR பதிவு

Yasir-shah-1
- Advertisement -

பாகிஸ்தான் அணியை சேர்ந்த வீரர்கள் சர்ச்சையில் சிக்குவது இது ஒன்றும் புதிதல்ல. இப்படி பல்வேறு விதமான தவறுகள் செய்து சிக்கும் பாகிஸ்தான் வீரர்களில் தற்போது 35 வயது உடைய அனுபவ வீரர் ஒருவர் 14 வயது பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தன் நண்பருக்கு உறுதுணையாக இருந்து அந்தப் பெண்ணை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்து தற்போது அவர் மீது FIR போட பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

pak

அதன்படி பாதிக்கப்பட்டுள்ள அந்த 14-வயது சிறுமி இஸ்லாமாபாத்தில் உள்ள ஷலிமார் காவல் நிலையத்தில் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நபர் மீதும் அவருக்கு ஆதரவாக இருந்து இந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டிய அந்த பாகிஸ்தான் வீரர் மீதும் புகார் அளித்துள்ளார். அவரது இந்த புகாரின் அடிப்படையில் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

அதன்படி பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வரும் பிரபல சுழற்பந்து வீச்சாளரான யாசிர் ஷாவின் நண்பர் பர்ஹான் துப்பாக்கிமுனையில் 14 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்தது மட்டுமின்றி அந்த சிறுமியை படம் எடுத்தும் மிரட்டியுள்ளார். அவரது இந்த தவறுக்கு ஆதரவாக யாசிர் ஷா துணை நின்று அந்த சிறுமியை மிரட்டி நான் சமூகத்தில் மிகவும் செல்வாக்குமிக்க ஒரு நபர் எனக்கு பல உயர் அதிகாரிகளை தெரியும் எனவே நீ யாரிடமும் இந்த விஷயத்தைப் பற்றிக் பேசக்கூடாது என்று மிரட்டியுள்ளார்.

yasir shah

யாஷிர் ஷாவும் அவரது நண்பரும் இணைந்து இது போன்று பல வயது குறைந்த சிறுமிகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து வருவதாகவும் அவர்மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் கூறுகையில் : இது குறித்து தகவல்களை திரட்டி வருகிறோம். இந்த விவகாரம் குறித்த முழுமையான உண்மை தகவல் கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : 207 பந்துகளை சந்தித்து வெறும் 26 ரன்களை மட்டுமே அடித்தும் பட்லரை பாராட்டிய – மைக்கேல் ஹசி

35 வயதான யாசிர் ஷா பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 235 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோன்று அவர் பாகிஸ்தான் அணிக்காக 25 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement