வரலாற்று சாதனையுடன் நியூசிலாந்து அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்ற – பின் ஆலன்

Finn Allen
- Advertisement -

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அந்த வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

வரலாற்று சாதனை நிகழ்த்திய பின் ஆலன் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா அணி சார்பாக அதிகபட்சமாக மார்க்கோ யான்சென் 55 ரன்களையும், டேவால்டு பிரேவிஸ் 34 ரன்களையும் குவித்தனர். பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூஸிலாந்து அணியானது :

- Advertisement -

தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சிதறடித்து 12.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 173 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக பின் ஆலன் 100 ரன்களையும், டிம் சைபர்ட் 58 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தனர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது நியூசிலாந்து அணி சார்பாக விளையாடிய துவக்க வீரர் பின் ஆலன் மாபெரும் சாதனையுடன் அந்த அணியை இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய பின் ஆலன் 33 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் 8 சிக்சர் என 100 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.சி.சி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை.. டாப் 10ல் 4 இந்திய வீரர்களுக்கு இடம் – விவரம் இதோ

இதன் மூலம் சர்வதேச டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை பின் ஆலன் நிகழ்த்தியுள்ளார். அதேபோன்று ஒட்டுமொத்தமாக சர்வதேச டி20 போட்டிகளிலும் சிக்கந்தர் ராசா மற்றும் லாப்டி ஈட்டன் ஆகியோரது சாதனையும் அவர் சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement