சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்ற முடியும் தொடர்களுக்கு மத்தியில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்குமான தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
டாப் 10-ல் இடம்பிடித்த 4 இந்திய வீரர்கள் :
அப்படி வெளியான இந்த டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியல் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் வெளியான இந்த டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் டாப் 10-இல் நான்கு இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்த விவரம் இந்திய ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினாலும் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து 874 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். அவருக்கு அடுத்து மூன்றாம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் துவக்க வீரரான சகிப்சாதா பர்ஹான் 848 புள்ளிகளுடன் தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இரண்டாவது இடத்தில் இருந்த இங்கிலாந்து அணியின் அதிரடி துவக்க வீரரான பிலிப் சால்ட் மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளார். அதேபோன்று நான்காவது இடத்தில் இஷான் கிஷனும், ஐந்தாவது இடத்தில் இலங்கை அணியின் துவக்க வீரர் பதும் நிஷாங்கா இருக்கின்றனர். ஆறாவது இடத்தில் இந்திய அணியின் இடது கை வீரர் திலக் வர்மா பிடித்துள்ளார். ஏழாவது இடத்தில் சூரியகுமார் யாதவ் இருக்கிறார்.
இதையும் படிங்க : செமி பைனல் போட்டியில் இந்திய அணிக்கு டப் கொடுக்கபோகும் 3 இங்கிலாந்து வீரர்கள் – பத்ரிநாத் கணிப்பு
தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வீரரான டேவால்டு பிரேவிஸ் எட்டாவது இடத்திலும், பட்லர் ஒன்பதாவது இடத்தினையும் பிடித்துள்ளனர். டிம் சைபர்ட் 10 ஆவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். இந்த பட்டியலில் டாப் 10-ல் நான்கு இந்திய வீரர்கள் இருக்கும் வேளையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 25 இடங்கள் முன்னேறி 40-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



