5 ஃபோர்ஸ் 19 சிக்ஸ்.. 151 ரன்ஸ்.. வாஷிங்டனை சூறையாடிய ஆலன்.. கெய்லை முந்தி இரட்டை உலக சாதனை

Finn allen
- Advertisement -

அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2025 சீசன் ஜூன் 13ஆம் தேதி துவங்கியது. அத்தொடரின் முதல் போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு கலிபோர்னியாவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற வாஷிங்டன் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய சான் பிரான்சிஸ்கோ அணிக்கு ஃபின் ஆலன் வாஷிங்டன் பவுலர்களை அடித்து நொறுக்கி சிக்ஸர்களாக பறக்க விட்டார். எதிர்புறம் டிம் ஃசைபர்ட் 18, ஜேக் பிரேசர் 6 ரன்களில் அவுட்டானார். இந்த பக்கம் பட்டாசாக விளையாடிய ஆலன் 20 பந்துகளில் அரை சதத்தை அடித்து மிரட்டலாக பேட்டிங் செய்தார்.

- Advertisement -

19 சிக்ஸர்கள்:

அவருக்கு எதிர்ப்புறம் கை கொடுக்க முயற்சித்த சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 36 (20) ரன்களில் அவுட்டானார். ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து பட்டாசாக விளையாடிய ஆலன் 34 பந்துகளில் சதத்தை அடித்து அசத்தினார். தொடர்ந்து மேக்ஸ்வெல் தலைமையிலான வாஷிங்டன் அணி பவுலர்களை சூறையாடிய அவர் 5 பௌண்டரி 19 சிக்சர்களை பறக்க விட்டு 151 (51) ரன்களை 296.08 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி பெவிலியன் திரும்பினார்.

இதன் வாயிலாக ஒரு டி20 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை ஆலன் படைத்துள்ளார். இதற்கு முன் 2017ஆம் ஆண்டு கிறிஸ் கெயில் டாக்கா டைனமைட்ஸ் அணிக்கு எதிராக மற்றும் 2024ஆம் ஆண்டு சகில் சௌஹான் சைப்ரஸ் அணிக்கு எதிராக தலா 18 சிக்சர்கள் அடித்ததே முந்தைய சாதனை. மேலும் டி20 கிரிக்கெட்டில் மிகவும் வேகமாக 150 ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் ஆலன் படைத்துள்ளார்.

- Advertisement -

இரட்டை உலக சாதனை:

இதற்கு முன் 2022 தென்னாப்பிரிக்கா உள்ளூர் தொடரில் நைட்ஸ் அணிக்கு எதிராக தேவால்ட் ப்ரேவிஸ் 52 பந்துகளில் 150 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. தற்போது ஆலன் 49 பந்துகளில் 150 ரன்கள் அந்த சாதனையை உடைத்துள்ளார். இது போக மேஜர் லீக் தொடரில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற நிக்போலஸ் பூரான் (137*) சாதனையையும் அவர் உடைத்துள்ளார்.

இதையும் படிங்க: 2 முறை யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் நீண்ட நேரம் பேசிய கவுதம் கம்பீர்.. என்ன பேசினார்? – விவரம் இதோ

இறுதியில் ஹசன் கான் 38* (18) ரன்கள் எடுத்த உதவியுடன் சான் பிரான்சிஸ்கோ 270 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அடுத்த விளையாடிய வாஷிங்டனை சிறப்பாக பவுலிங் செய்த சான் பிரான்சிஸ்கோ 13.1 ஓவரில் 146க்கு ஆல் அவுட் செய்தது. வாஷிங்டன் அணிக்கு அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 42, மிட்சேல் ஓவன் 39 ரன்கள் எடுத்தார்கள். அதனால் 123 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற சான் பிரான்சிஸ்கோ அணிக்கு அதிகபட்சமாக தலா ஹரிஷ் ரவூப், ஹசன் கான் 3 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.

Advertisement