எத்தனையோ பினிசெர்கள் வந்தாங்க போனாங்க, ஆனா தல தோனி போல வருமா – முன்னாள் வீரரின் பாராட்டு

MS Dhoni 16
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மும்பை நகரில் பல பரபரப்பான திருப்பங்களுடன் 4-வது வாரத்தைக் கடந்து ரசிகர்களுக்கு த்ரில்லர் விருந்து படைத்து வருகிறது. இந்த தொடரில் 4 கோப்பைகளை வென்று வெற்றிகரமான 2-வது ஐபிஎல் அணி என்ற பெயருடன் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வாரங்களில் அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. இருப்பினும் அதன்பின் பெங்களூருவுக்கு எதிரான 5-வது போட்டியில் மீண்டெழுந்த அந்த அணி முதல் வெற்றியை பதிவு செய்தாலும் குஜராத்திடம் மீண்டும் தோற்றது.

CSK-1

- Advertisement -

அந்த நிலைமையில் பரம எதிரியான மும்பைக்கு எதிரான போட்டியில் 2-வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி பொன்னான 4 புள்ளிகளை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது. மறுபுறம் சென்னையை விட 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த மும்பை தொடர்ந்து 8 போட்டிகளில் தோல்வி அடைந்ததை பார்த்தால் சென்னை எவ்வளவோ பரவாயில்லை என்று பாராட்டும் அளவுக்கு ஓரளவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பிளே ஆஃப் போகுமா சென்னை:
தற்போதைய நிலைமையில் அடுத்த 8 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை பதிவு செய்தால் எந்தவித சிரமமுமின்றி காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு அந்த அணியால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். 7 வெற்றிகளை பதிவு செய்தால் அதிக ரன்ரேட் இருக்கும் பட்சத்தில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியும். இதற்கு முன் வரலாற்றில் ஒரு முறை கூட இதுபோல ஆரம்ப கட்டத்திலேயே தொடர் தோல்விகளை சந்திக்காத அந்த அணி இப்போது முதல் முறையாக சந்தித்துள்ள இந்த தோல்விகளிலிருந்து மீண்டு வந்து சென்னையால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.

CSK vs RCB 2

இந்நிலையில் ஆரம்பகட்ட தோல்விகளால் சென்னையை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று இதர அணிகளுக்கு முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக இருக்கும் அவர் பேசியது பின்வருமாறு. “எந்த அணியும் சென்னையை குறைவாக எடை போட்டு தவறு செய்ய வேண்டாம். தொடர் தோல்விகளில் இருந்து வெற்றியை பிடிப்பதற்கு இந்த அணிக்கு நன்றாக தெரியும். இதற்கு முன்பு கூட இது போன்ற தருணங்களில் அவர்கள் சாதித்து காட்டியுள்ள காரணத்தாலேயே அவர்கள் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அபாயகரமான அணியாக திகழ்கின்றனர்” என்று கூறினார்.

- Advertisement -

பார்முக்கு திரும்பிய தோனி:
அதேபோல் 4 கோப்பைகளை வென்று 2-வது வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என பெயரெடுத்து தற்போது முதல் முறையாக சாதாரண வீரராக விளையாடி வரும் எம்எஸ் தோனி கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் படுமோசமான பார்மில் திண்டாடி வந்தார். அதனால் 40 வயதை கடந்த அவரை முடிந்து போன பினிஷர் என பலரும் கிண்டல் செய்தனர். ஆனால் அதையெல்லாம் காதில் வாங்காத அவர் இந்த வருடம் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை 62/5 என தவித்தபோது அதிரடியாக 50* (38) அரைசதம் அடித்து முதல் போட்டியிலேயே பார்முக்கு திரும்பினார்.

Irfan-pathan

அதைவிட மும்பைக்கு எதிரான போட்டியில் கடைசி 4 பந்துகளில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட போது 6, 4, 2, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை தெறிக்கவிட்ட அவர் 28* (13) ரன்களை விளாசி சென்னைக்கு திரில் வெற்றியை தனி ஒருவனை போல பெற்றுக் கொடுத்தார். அதன் காரணமாக கூடவே பிறந்த பினிஷிங் ஸ்டைல் 40 வயதானால் மட்டுமல்ல என்றுமே போகாது என காட்டிய அவர் தன்னை ஒரு மிகச்சிறந்த பினிசர் என்று மீண்டும் நிரூபித்தார்.

- Advertisement -

தலப்போல வருமா:
இதே நிலைமையில் பெங்களூர் அணிக்காக ஒவ்வொரு போட்டியிலும் அற்புதமான பினிஷெராக செயல்பட்டு வரும் தினேஷ் கார்த்திக் போன்றவர்கள் தங்களை மிகச்சிறந்த பினிஷெர்களாக அடையாள படுத்தினாலும் என்றுமே எம்எஸ் தோனி தான் மகத்தான பின்சர் என்று இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.

MS Dhoni Finisher

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் வரலாற்றில் எம்எஸ் தோனி மிகசிறந்த பினிஷர். ஒவ்வொரு வருடமும் பினிஷர் எனும் பட்டியலில் நிறைய பேர் இணைகிறார்கள். ஆனால் யாராலும் அவரை அதிலிருந்து தூக்கி எறிய முடிவதில்லை. தோனி என்பவர் இந்த தொடரின் ஒரு கண்டுபிடிப்பு. அவர் உண்மையான அம்பாசிடர் ஆவார்.

இதையும் படிங்க : நடப்பு தொடரின் 8 போட்டிகளிலும் தொடர்ந்து தோக்க இதுவே காரணம் – உண்மையை ஒப்புக்கொண்ட ரோஹித்

இந்த சீசனை நீங்கள் பார்க்கும் பொழுது ராகுல் திவாடியா, தினேஷ் கார்த்திக், சிம்ரோன் ஹெட்மையர் போன்றவர்கள் தொடர்ச்சியாக பினிஷிங் செய்கின்றனர். ஆனால் அல்டிமேட் பினிஷர் என பார்க்கும்போது தோனி எனும் பெயர்தான் மனதில் முதலாவதாக தோன்றுகிறது” என்று கூறினார்.

Advertisement