நடப்பு தொடரின் 8 போட்டிகளிலும் தொடர்ந்து தோக்க இதுவே காரணம் – உண்மையை ஒப்புக்கொண்ட ரோஹித்

Rohit
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு ஒரு மிகப்பெரிய சோதனை காலமாக மாறி உள்ளது. ஏனெனில் இந்த ஐபிஎல் தொடரில் தோல்வியுடன் ஆரம்பித்த மும்பை அணியானது ஓரிரண்டு தோல்விக்குப் பின்னர் மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியோடு சேர்த்து மொத்தம் இதுவரை நடைபெற்றுள்ள 8 போட்டிகளிலுமே தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது மட்டுமின்றி பிளே ஆப் சுற்றின் வாய்ப்பை இழந்து முதல் அணியாக இத்தொடரில் இருந்து வெளியேறியது என்று தற்போதைய கூறும் அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது.

Mumbai Indians MI

- Advertisement -

நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி 168 ரன்களை குவிக்க அதைத்தொடர்ந்து 169 ரன்களை சேசிங் செய்த மும்பை அணி 132 ரன்களுக்கு சுருண்டு 36 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்தது ரசிகர்களிடையே பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பல்வேறு விஷயங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இந்த போட்டியில் லக்னோ அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். இதுபோன்று பேட்டிங்க்கு சாதகமான மைதானங்களில் பந்து வீசுவது என்பது எளிதானது கிடையாது இருந்தாலும் அவர்கள் சிறப்பாக பந்து வீசி விட்டனர். அதேபோன்று இந்த ஸ்கோர் எளிதாக சேசிங் செய்ய வேண்டிய ஸ்கோர் தான். ஆனால் நாங்கள் இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை என்பதே உண்மை.

Rohit Sharma Duck Out

இதுபோன்ற டார்கெட்டை சேசிங் செய்ய நல்ல பார்ட்னர்ஷிப் என்பது அவசியம். ஆனால் இந்த போட்டியில் எந்த ஒரு இடத்திலும் எங்களுக்கு சரியான பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. மூமென்ட்டமும் கிடைக்வில்லை. இந்த தொடர் முழுவதுமே மும்பை அணி இப்படி தொடர் தோல்விகளை சந்திக்க பேட்டிங் சரியில்லை என்பது மட்டுமே காரணம். அதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். மிடில் ஆர்டரில் இன்னும் அதிக பொறுப்பை எடுத்து பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டியது அவசியம்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஒவ்வொரு போட்டியிலும் ஒரு வீரர் பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும். ஆனால் இந்த தொடர் முழுவதுமே எங்கள் அணி வீரர்கள் யாரும் பெரிய இன்னிங்ஸ் விளையாட வில்லை. மற்ற அணி வீரர்கள் எங்கள் அணிக்கு எதிராக ஒரு நீண்ட இன்னிங்சை விளையாடும் போது எங்கள் அணியில் பேட்ஸ்மேன்கள் பெரிய இன்னிங்சை விளையாடமுடியாமல் போனதே இந்த தொடரில் நாங்கள் அடைந்த தொடர் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க : சொதப்பும் அவர்களை விமர்சிக்காதீங்க. அவங்க உங்க ஹீரோ சப்போர்ட் பண்ணுங்க – முன்னாள் வீரர்கள் கோரிக்கை

இம்முறை அணியில் பல மாற்றங்கள் இருந்ததால் பல விதங்களில் நாங்கள் வீரர்களை உபயோகப்படுத்தி பார்த்தோம். இறுதியில் தோல்வியே மிஞ்சியது இருந்தாலும் இளம் வீரர்களுக்கு தேவையான வாய்ப்புகளை வழங்கும் போது அவரிடமிருந்து நல்ல ஆட்டம் வெளிவரும் என்று ரோகித் சர்மா வருத்தத்துடன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement