சொதப்பும் அவர்களை விமர்சிக்காதீங்க. அவங்க உங்க ஹீரோ சப்போர்ட் பண்ணுங்க – முன்னாள் வீரர்கள் கோரிக்கை

Virat Kohli Rohit Sharma
- Advertisement -

பல எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமான 4-வது இடத்தை கடந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த தொடரில் முதல் வாரத்திலிருந்தே நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்த மும்பையும் சென்னையும் தொடர் தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களைப் பிடித்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்விஸ்ட் வைத்தது.

அதிலும் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் பங்கேற்ற 8 போட்டிகளிலும் தொடர் தோல்விகளை பதிவு செய்து வரலாற்றிலேயே முதல் 8 போட்டிகளில் தோல்வி அடைந்த அணியாக படுமோசமான சாதனை படைத்தது.

- Advertisement -

அதன் காரணமாக அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகியுள்ள நிலையில் 4 கோப்பைகளை வென்று வெற்றிகரமான 2-வது ஐபிஎல் அணி என பெயரெடுத்த சென்னையும் தனது முதல் 7 போட்டிகளில் 5 தோல்விகளை பெற்றுள்ளதால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு குறைந்து போய் 9-வது இடத்தில் தவிக்கிறது.

சொதப்பும் ரோஹித் – ரோஹித்:
ஆனால் அதை விட இந்தியாவின் டாப் 2 நட்சத்திர பேட்ஸ்மேனாக ரோகித் சர்மாவும் விராட் கோலியும் இந்த தொடரில் இதுவரை பெரிய அளவில் ரன்கள் அடிக்க முடியாமல் படுமோசமான பாரமில் திண்டாடுவது அனைத்து ரசிகர்களுக்கும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற மகத்தான சாதனை படைத்துள்ள விராட் கோலி இதுவரை பங்கேற்று 8 போட்டிகளில் முறையே 41*, 12, 5, 48, 1, 12, 0, 0 என 119 ரன்களை வெறும் 17.00 என்ற மோசமான சராசரியில் 122.68 என்ற ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் எடுத்துள்ளார்.

- Advertisement -

அதிலும் வரலாற்றிலேயே முதல் முறையாக 2 அடுத்தடுத்த போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டாகி திண்டாடும் அவரின் பெங்களூர் அணியில் உள்ள இதர வீரர்கள் ஓரளவு சிறப்பாக செயல்படுவதால் அந்த அணி வெற்றி நடைபோடுகிறது.

மறுபுறம் தனது அதிரடி சரவெடி பேட்டிங்கால் ரசிகர்களிடையே ஹிட்மேன் என பெயரெடுத்த ரோகித் சர்மா இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளில் முறையே 41, 10, 3, 26, 29, 6, 0, 39 என வெறும் 153 ரன்களை 19.12 என்ற சுமாரான சராசரியில் 126.44 என்ற ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் எடுத்துள்ளார். இவரின் பேட்டில் இருந்து இப்படி பெரிய அளவில் ரன்கள் வராததே மும்பையின் இந்த வரலாற்று தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது.

- Advertisement -

ரசிகர்கள் கவலை:
கடந்த சில வருடங்களாகவே இவர்களின் ரன்களில் சரிவு ஏற்பட்ட நிலையில் தற்போது அது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இப்படி இந்தியாவின் தற்போதைய கேப்டனும் முன்னாள் கேப்டனும் மோசமான பார்மில் தவிப்பது இந்திய ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது. ஏனெனில் இந்திய பேட்டிங் துறையில் டாப் ஆர்டரில் இந்த இருவரும் முதுகெலும்பாக கருதப்படும் நிலையில் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இவர்கள் எப்படியாவது பார்முக்கு திரும்ப வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இருப்பினும் ஏற்கனவே பல உலகத் தரம் வாய்ந்த பவுலர்களை எதிர்கொண்டு கடினமான சூழ்நிலைகளிலும் தங்களின் அபார திறமையை வெளிப்படுத்தி உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் என பெயரெடுத்த இவர்கள் விரைவில் பார்முக்கு திரும்புவார்கள் என்று நிறைய முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். எனவே இதுநாள் வரை ஹீரோவாக கொண்டாடிய இவர்களுக்கு இந்த கடினமான நேரத்தில் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உங்களின் ஹீரோ:
இது போன்ற சாம்பியன் வீரர்கள் இந்திய அணிக்காக திரும்பும் போது நிச்சயம் சிறப்பாக செயல்படுவார்கள் என்று பல முன்னாள் வீரர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அதற்கு முன்பாக அடுத்தடுத்த போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டாகி மனதளவில் பாதிக்கப்பட்டதை போல் காட்சியளிக்கும் விராட் கோலி ஒரு சில மாதங்கள் ஓய்வு எடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்ப வேண்டும் என்றும் ரவி சாஸ்திரி போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களும் வல்லுநர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

எது எப்படியோ கிரிக்கெட்டில் பார்ம் என்பது தற்காலிகமானது கிளாஸ் என்பதே நிரந்தரமானது என்று கூறுவதைப் போல விராட் கோலியும் ரோகித் சர்மாவும் கண்டிப்பாக நல்ல பார்முக்கு திரும்பி இந்த வருடம் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை இந்தியாவிற்கு வாங்கித் தருவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Advertisement