போராடிய ராஜஸ்தான் ! ரோஹித்தின் பிறந்தநாளில் மும்பை முதல் வெற்றி – சாத்தியமானது எப்படி

Tim David MI vs RR
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 30-ஆம் தேதி 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 44-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்றன. இந்த போட்டிக்கு முன்பாக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்துள்ள மும்பை ஏற்கனவே 8 தொடர் தோல்விகளால் லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியான நிலையில் இந்த போட்டியிலாவது வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்பட்டது.

Jos Buttler vs Mi

- Advertisement -

அந்த சூழ்நிலையில் நவி மும்பையில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு தொடக்க வீரர் தேவ்தூத் படிக்கள் 15 (15) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 2 சிக்சர்களை பறக்க விட்டாலும் 16 (7) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அடுத்து வந்த டார்ல் மிட்சேல் மெதுவாக விளையாடி 17 (20) ரன்களில் ஆட்டமிழந்து பின்னடைவை ஏற்படுத்தி சென்ற நிலையில் மறுபுறம் ஏற்கனவே 3 சதங்களை அடித்து நல்ல பார்மில் இருக்கும் மற்றொரு தொடக்க வீரர் ஜோஸ் பட்லரும் மும்பையின் பந்துவீச்சில் மெதுவான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

ராஜஸ்தான் 158 ரன்கள்:
இருப்பினும் பொறுத்தது போதும் என்று 15-வது ஓவரில் இளம் வீரர் ரித்திக் ஷகீன் வீசிய ஒரே ஓவரில் 4 சிக்சர்களை பறக்க விட்ட அவர் 5 பவுண்டரி 4 சிக்சருடன் அரைசதம் கடந்து 67 (52) ரன்களை விளாசி அதே ஓவரின் இறுதியில் ஆட்டமிழந்தார். அப்போது களமிறங்கிய ரியன் பரக் 3 (3) ரன்களில் நடையை கட்ட அடுத்து வந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெறும் 9 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சர் உட்பட அற்புதமான 21 ரன்களை குவித்து அவுட்டானார். ஆனால் ராஜஸ்தானின் பினிஷராக கருதப்படும் சிம்ரோன் ஹெட்மையர் மறுபுறம் 1 பவுண்டரி கூட அடிக்காமல் 14 பந்துகளில் வெறும் 6* ரன்கள் மட்டுமே எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் 158/6 ரன்களை மட்டுமே எடுத்தது. மும்பை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ரித்திக் ஷாக்கின் மற்றும் ரிலே மெரெடித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதை தொடர்ந்து 159 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு அதற்கு கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா தனது பிறந்தநாளில் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய 3-வது ஓவரில் வெறும் 2 (5) ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அடுத்த சில ஓவர்களில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 26 (18) ரன்களில் அவுட்டான இஷன் கிசான் மீண்டும் ஏமாற்றியதால் 41/2 என தடுமாறிய மும்பையை அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் இளம் வீரர் திலக் வர்மாவுடன் இணைந்து அதிரடியாக மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

- Advertisement -

மும்பை போராட்டம்:
3-வது விக்கெட்டுக்கு பொறுப்புடனும் அதிரடியாகவும் 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 51 (39) ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடிய சூர்யகுமார் யாதவ் 15-வது ஓவரில் ஆட்டமிழக்க அடுத்த ஓவரிலேயே 1 பவுண்டரி 2 சிக்சருடன் 35 (30) ரன்கள் எடுத்திருந்த திலக் வர்மாவை அவுட் செய்த ராஜஸ்தான் போட்டியை தனது பக்கம் திருப்ப முயற்சித்தது. குறிப்பாக கடைசி 30 பந்துகளில் 37 ரன்கள் தேவைப்பட்டபோது முதல் ஒருசில போட்டிகளில் சொதப்பியதன் காரணமாக பெஞ்சில் அமர வைக்கப்பட்டு இந்த போட்டியில் மீண்டும் வாய்ப்பளிக்க வெளிநாட்டு வீரர் டிம் டேவிட் அதிரடியாக ரன்களைக் குவித்து மும்பையை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார்.

SKY tilak Varma

கடைசி நேரத்தில் வெறும் 9 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 20* ரன்களை விளாசி வெற்றியை உறுதிசெய்த வேளையில் அவருக்கு கம்பெனி கொடுத்த பொல்லார்ட் 10 (14) ரன்கள் எடுத்து கடைசி ஓவரின் முதல் பந்தில் அவுட்டாகி பரபரப்பை ஏற்படுத்தினாலும் 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் அடுத்த பந்தில் களமிறங்கிய டேனியல் சாம்ஸ் சிக்சர் அடித்தார். அதனால் 19.2 ஓவர்களில் 161/5 ரன்கள் எடுத்த மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு வழியாக இந்த வருட ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்து மிகப் பெரிய நிம்மதி பெருமூச்சு விட்டது.

ரோஹித் பிறந்தநாளில்:
இதனால் 8 போட்டிகளுக்கு பின் 9-வது போட்டியில் முதல் வெற்றியை சுவைத்த மும்பை அடுத்தடுத்த தோல்விகளால் ஏற்பட்ட காயங்களுக்கு தனக்கு தானே மருந்திட்டுக் கொண்டது. அதிலும் அந்த அணிக்கு 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என பெயரெடுத்த கேப்டன் ரோகித் சர்மா இன்று 35-வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவரின் பிறந்த நாளில் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை முதல் வெற்றியை பதிவு செய்து அவருக்கு பிறந்தநால் பரிசளித்தது அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

Rohith

மறுபுறம் ராஜஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அஸ்வின், சஹால் போன்றவர்கள் பந்துவீச்சில் தலா 1 விக்கெட் எடுத்து போராடினாலும் பேட்டிங்கில் தேவையான ரன்களை அடிக்காததால் தோல்வியடைந்த அந்த அணி 9 போட்டிகளில் 3-வது தோல்வியை பதிவு செய்து தொடர்ந்து புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் நீடிக்கிறது.

Advertisement