- Advertisement -
ஆசிய கோப்பை

ரொம்ப சீக்கிரம் ஜெய்ஸ்வாலுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.. அவர் செம டேலன்ட் – முன்னாள் இலங்கை வீரர் ஆதரவு

2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியானது கடந்த வாரம் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு அவர்கள் இருவர் உட்பட மொத்தம் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல்வேறு விமர்சனங்கள் இந்திய அணித்தேர்வின் மீது இருந்து வருகின்றன.

விரைவில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கும் : பர்வேஸ் மஹரூப்

ஏனெனில் இந்த ஆசிய கோப்பை தொடரில் சில வீரர்களுக்கு இடம் கிடைத்தது குறித்தும், சில வீரர்களுக்கு இடம் கிடைக்காதது குறித்தும் பல்வேறு முக்கிய விடயங்கள் அதிகளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய ஜெய்ஸ்வாலுக்கு இந்த ஆசிய கோப்பை தொடரில் இடம் கிடைக்காதது பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான சுப்மன் கில் மீண்டும் டி20 போட்டிகளுக்கு திரும்பிய வேளையில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல் போட்டிகளின் போது அசத்தலாக செயல்பட்டு 559 ரன்கள் குவித்தும் அவருக்கு இடம் கிடைக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வால் இடம்பெறவில்லை என்றாலும் வெகு விரைவில் இந்திய டி20 அணிக்கு ஜெய்ஸ்வால் திரும்புவார் என இலங்கை அணியின் முன்னாள் வீரரான பர்வேஸ் மஃஹரூப் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்காததை என்னால் நம்ப முடியவில்லை. ஏனெனில் இளம் வீரரான அவர் மிகச் சிறப்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். இந்தியாவில் திறமையான வீரர்கள் பலர் இருப்பதினால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்.

- Advertisement -

ஆனாலும் வெகு விரைவில் அவர் டி20 போட்டிகளுக்கான வாய்ப்பை பெறுவார். அதுமட்டுமின்றி அந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டு நிரந்தர துவக்க வீரராகவும் மாறுவார் என பர்வேஸ் மஹரூப் கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

இதையும் படிங்க : எனக்கு அந்த பதவியே வேணாம்.. ராஜஸ்தான் அணிக்காக உயிரையே கொடுப்பேன் – நெகிழவைத்த துருவ் ஜுரேல்

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தாலும் அந்த தொடரில் கருப்பு குதிரையாக இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் திகழும் என்றும் எந்த அணி போட்டியின் அன்றைய நாளில் சிறப்பாக செயல்படுகிறதோ அந்த அணியே கோப்பையை வெல்லும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -