புஜாரா – ரஹானே இருவரில் ஒருவரை நீக்கி அந்த பையனுக்கு வாய்ப்பு குடுங்க – பாரூக் என்ஜினியர் சப்போர்ட்

Engineer
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் லீட்ஸ் மைதானத்தில் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

indvseng

- Advertisement -

இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் ரகானே அல்லது புஜாரா ஆகிய இருவரில் ஒருவருக்கு பதிலாக இளம் வீரருக்கு ஒருவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான பாரூக் இன்ஜினியர் தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட சில வீரர்கள் காயம் ஏற்பட்டு இந்த தொடரில் இருந்து விலகியதன் காரணமாக இலங்கை தொடரில் சிறப்பாக செயல்பட்ட துவக்கவீரர் ப்ரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டனர்.

அதன்படி அணியில் இணைந்த இருவரும் தற்போது வரை வெளியிலேயே அமர்ந்துள்ளனர். மேலும் இனிவரும் போட்டிகளிலும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதே உண்மை. இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சூர்யகுமார் யாதவ்க்கு நிச்சயம் வாய்ப்பு வழங்க வேண்டும் என பாரூக் இன்ஜினியர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

sky

முதலில் நான் சூர்யகுமார் யாதவ்வின் மிகப்பெரிய ரசிகன். அவர் ஒரு க்ளாஸ் பிளேயர். நிச்சயம் புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரில் ஒருவருக்கு பதிலாக அவர் இந்திய அணியில் இடம் பெற வேண்டும். ரஹானே மற்றும் புஜாரா ஆகியோரும் க்ளாஸ் பிளேயர் தான். இருந்தாலும் சூரியகுமார் யாதவ் ஒரு மேட்ச் வின்னர் எனவே அவரை அணியில் சேர்க்க வேண்டும். அவரது அதிரடி நிச்சயம் டெஸ்ட் போட்டிகளிலும் விரைவாக சதம் அடிக்கும் அளவிற்கு உள்ளது.

sky

எனவே சூரியகுமார் யாதவ்க்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் என்னதான் சொன்னாலும் கோலியின் மரபு என்று ஒன்று இருக்கிறது. அதாவது ஒரு போட்டியில் வெற்றி பெற்ற அணியை அவர் எப்போதுமே மாற்ற மாட்டார் என்பதால் நிச்சயம் இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ்க்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement