
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இங்கிலாந்து அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது வரும் ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இந்து தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்ய முடியும் என்பதால் இந்த போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.
இதன் காரணமாக அனைவரது பார்வையும் இந்த போட்டியின் மீது திரும்பியுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் விளையாடி வரும் இந்திய அணி குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ள முன்னாள் இந்திய வீரரான பரூக் இன்ஜினியர் கூறுகையில் :
இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாம் இடத்தில் மீண்டும் சாய் சுதர்சனை கொண்டு வர வேண்டும். ஏனெனில் முதல் போட்டியில் அவருக்கு அறிமுக வாய்ப்பை கொடுத்துவிட்டு அதன்பின்னர் அவரை உடனடியாக நீக்கியது தவறு. அவருக்கு பதிலாக விளையாடி வரும் கருண் நாயர் 20-30 ரன்களை குவித்தாலும் பெரிய இன்னிங்ஸ்ஸை அவரால் விளையாட முடியவில்லை.
எனவே சாய் சுதர்சனை மீண்டும் மூன்றாவது இடத்திற்கு கொண்டுவர வேண்டும். அதேபோன்று இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் விளையாடியிருக்க வேண்டும். ஆனால் முதல் மூன்று போட்டிகளிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. நான்காவது போட்டியிலாவது அவருக்கு வாய்ப்பினை வழங்குங்கள்.
இதையும் படிங்க : யுவ்ராஜ் சிங்கின் டெஸ்ட் ரெக்கார்டை காலி செய்ய காத்திருக்கும் நிதீஷ் ரெட்டி – விவரம் இதோ
குல்தீப் யாதவ் ஒரு மேட்ச் வின்னர் அவரால் எந்த மைதானத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். அவர் ஒருவேளை இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்தே விளையாடி இருந்தால் இந்திய அணி மூன்றுக்கு ஜீரோ (3-0) என்ற கணக்கில் இந்நேரம் இந்திய அணி தொடரை கைப்பற்றியிருக்கும் என ஃபரூக் இன்ஜினியர் கூறியது குறிப்பிடத்தக்கது.