இந்தியாவிடம் மாஸ் காட்டிட்டீங்க.. பாகிஸ்தான் வீரருக்கு ஹீரோ வரவேற்பு.. புதிய ஸ்டிக்கரும் வெளியீடு

Farhan Pakistan
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சொல்லப்போனால் அத்தொடரில் பாகிஸ்தானை 3 முறை தோற்கடித்த இந்தியா கடைசியாக விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்றுள்ளது. மறுபுறம் பரம எதிரி இந்தியாவிடம் சந்தித்த தொடர் தோல்விகளால் பாகிஸ்தான் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.

முன்னதாக அத்தொடரில் இந்தியாவை தோற்கடித்து பழி தீர்க்க வேண்டும் என்ற வெறியுடன் பாகிஸ்தான் விளையாடியது என்றே சொல்லலாம். ஏனெனில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினார்கள். அதற்கு பதிலடியாக லீக் சுற்றின் முடிவில் பாகிஸ்தான் அணியுடன் கை கொடுக்காமல் இந்திய அணி வெளியேறியது.

- Advertisement -

மாஸ் காட்டிட்டீங்க போங்க:

அந்த நிகழ்வுக்கு பதிலடியாக சூப்பர் 4 சுற்றில் அரை சதமடித்த பாகிஸ்தான் வீரர் ஃபர்கான் தன்னுடைய தோளில் பேட்டை வைத்து துப்பாக்கியால் இந்தியாவை சுடுவது போல் கொண்டாடினார். அத்துடன் 6 இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்ற போலியான கருத்தை ஹரிஷ் ரவூப் சைகையில் செய்து காட்டி இந்தியாவை கலாய்த்தார். அவை அனைத்துக்கும் செயலில் பதிலடி கொடுத்த இந்திய அணியினர் பாகிஸ்தானுக்கு ஹாட்ரிக் தோல்விகளை பரிசளித்தனர்.

இந்நிலையில் ஆசியக் கோப்பையை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் வீரர்கள் நாடு திரும்பினர். அங்கே பாகிஸ்தான் வீரர் ஃபர்கானுக்கு சொந்த ஊரான சர்ஸ்சடாவில் ஹீரோவை போன்ற வரவேற்பு கொடுக்கப்பட்டது. பொதுவாக அதிக ரன்கள் அடித்து நாட்டுக்கு கோப்பையை வென்று கொடுக்கும் வீரருக்கு சொந்த ஊரில் ஹீரோவை போன்ற உற்சாக வரவேற்பு கொடுப்பது வழக்கமாகும்.

- Advertisement -

புதிய ஸ்டிக்கர் வெளியீடு:

ஆனால் ஆசியக் கோப்பையில் 3வது அதிக ரன்கள் மட்டுமே அடித்த ஃபர்கானுக்கு சொந்த ஊரில் பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. குறிப்பாக தோல்வியை சந்தித்தாலும் துப்பாக்கியால் இந்தியாவை சுடுவது போல் ஃபர்ஹான் கொண்டாடியது பாகிஸ்தான் ரசிகர்களை கவர்ந்தது. அதனால் “இந்தியாவிடம் மாஸ் காட்டிட்டீங்க போங்க” என்ற வகையில் பாகிஸ்தான் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

இதையும் படிங்க: கம்பீர் பேச்சை கேட்டு அவரை செலக்ட் பண்ணா.. 2027 உ.கோப்பைக்கு குட்பை சொல்ல வேண்டிதான்.. ஸ்ரீகாந்த் சாடல்

அதனால் மகிழ்ச்சியடைந்த ஃபர்கான் அடுத்ததாக தம்முடைய கொண்டாட்டத்தை ஸ்டிக்கராக உருவாக்கி அதை பேட்டில் ஒட்டி வெளியிட்டுள்ளார். “கன் மூட்” என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள அந்த பேட்டை வருங்கால போட்டிகளில் பயன்படுத்தி விளையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement