கம்பீர் பேச்சை கேட்டு அவரை செலக்ட் பண்ணா.. 2027 உ.கோப்பைக்கு குட்பை சொல்ல வேண்டிதான்.. ஸ்ரீகாந்த் சாடல்

Srikkanth 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா மண்ணில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரில் விளையாடுவதற்கான 2 இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டது. அதில் ஒருநாள் அணியில் ரோஹித் சர்மாவை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சுப்மன் கில்லை புதிய கேப்டனாக நியமித்துள்ளது. மறுபுறம் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் சாதாரண வீரர்களாக மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதனால் 2027 உலகக் கோப்பையில் அவர்கள் ஒன்றாக விளையாடுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைந்துள்ளது. அதே போல ரவீந்திர ஜடேஜா கழற்றி விடப்பட்டது பல ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. மேலும் சஞ்சு சாம்சன் தன்னுடைய கடைசி ஒருநாள் போட்டியில் சதத்தை அடித்திருந்தும் ஆஸ்திரேலியா தொடரில் தேர்வு செய்யப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

கம்பீரின் ஆஸ்தான வீரர் ராணா:

ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 2 அணிகளிலும் ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2024 ஐபிஎல் கோப்பையை கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில் கொல்கத்தா வெல்வதற்கு அவர் முக்கிய பங்காற்றினார். அந்த ஒரே காரணத்திற்காக இந்திய அணியின் பயிற்சியாளராக வந்ததும் அவருக்கு கம்பீர் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

அந்த வாய்ப்பில் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ராணா அசத்தவில்லை என்பதே நிதர்சனமாகும். ஆனாலும் கௌதம் கம்பீர் அவரை ஆல் ஃபார்மட் வீரராக வளர்க்க நினைப்பது பல ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. இந்நிலையில் ராணா போன்ற வீரரை தேர்ந்தெடுத்தால் இந்திய அணி 2027 உலகக் கோப்பையை வெல்ல முடியாது என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

கோப்பைக்கு குட்பை:

அதே போல உள்ளூரில் தொடர்ச்சியாக அசத்துவதற்கு முன் நிதிஷ் ரெட்டிக்கு வாய்ப்பளிப்பதும் சரியான அணுகுமுறை இல்லை என்று அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் ஸ்ரீகாந்த் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் ஒரு நிரந்தரமான உறுப்பினர் யாரெனில் ஹர்ஷித் ராணா. இந்திய அணியில் அவர் ஏன் இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது”

இதையும் படிங்க: ஸ்வினை மிஸ் பண்றேன்.. நாளைக்கு நானும் இருக்க மாட்டேன்.. இரவோடு டிக்ளேர் செய்தது பற்றி ஜடேஜா பேட்டி

“சிலரை நீங்கள் நன்றாக விளையாடாவிட்டாலும் தேர்ந்தெடுப்பீர்கள். சிலர் நன்றாக விளையாடினாலும் தேர்ந்தெடுக்க மாட்டீர்கள். எப்போதும் நீங்கள் கௌதம் கம்பீர் ஆம் என்று சொல்லக்கூடிய ஹர்ஷித் ராணா போன்றவரை போல் இருக்க வேண்டும். நீங்கள் 2027 உலகக் கோப்பையை நோக்கி அணியை கட்டமைக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்வது போல் எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை ராணா அல்லது நிதிஷ் போன்றவரை முதன்மை வீரர்களாக கருத்தில் கொண்டால் நீங்கள் கோப்பைக்கு குட்பை காட்டலாம்” என்று கூறினார்.

Advertisement