ஆசிய கோப்பை 2022 : ஷ்ரேயஸ் ஐயருக்கு பதிலாக இளம் வீரருக்கு வாய்ப்பு – ரசிகர்கள் பாராட்டு

Shreyas Iyer
- Advertisement -

நிறைவு பெற்ற வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து ஜிம்பாப்வே தொடரில் ஷிகர் தவான் தலைமையில் 2வது தர இளம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அதன்பின் வரும் ஆகஸ்ட் 27இல் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கும் வரலாற்றின் 15ஆவது ஆசிய கோப்பை தொடரில் இந்தியா களமிறங்குகிறது. வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த ஆசிய கோப்பையில் களமிறங்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள கேஎல் ராகுல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் பார்மின்றி விமர்சனத்தில் தவித்து வரும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு மாத ஓய்வுக்குப் பின் அணிக்குத் திரும்பியுள்ளார். அவர்களுடன் சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா போன்ற சமீபத்திய தொடர்களில் அசத்திய சீனியர் வீரர்களும் அரஷ்தீப் சிங், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் போன்ற இளம் வீரர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பெஞ்சில் ஷ்ரேயஸ்:
ஆனால் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் காயத்தால் இந்த தொடரிலிருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதுபோக இந்த தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிசான் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் மற்றொரு இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படாததை ரசிகர்கள் வரவேற்கின்றனர்.

ஏனெனில் சுழலுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் சுழல் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கி அதிரடியாக ரன்களை சேர்க்கும் திறமை பெற்றுள்ள அவர் கடந்த பிப்ரவரியில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அந்த அணி சுழல் பந்துவீச்சாளர்களை சரமாரியாக அடித்தார். அதிலும் தொடர்ச்சியாக 3 அரை சதங்களை விளாசிய அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையையும் முறியடித்தார்.

- Advertisement -

ஷார்ட் பந்துகள்:
அதனால் இந்திய அணியில் ஒரு நிரந்தரமான இடத்தைப் பிடித்த அவர் அதன்பின் நடந்த ஐபிஎல் 2022 தொடரில் 400 ரன்களை தாண்டாத நிலையில் அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் ரபாடா போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் விரித்த ஷார்ட் பிட்ச் வலையில் பெரும்பாலான போட்டிகளில் அவுட்டாகி சென்றார். அந்த வகையான பந்துகளில் ரொம்பவும் தடுமாறிய காரணத்தால் அதில் விரைவில் முன்னேற்றத்தை காணுமாறு வாசிம் ஜாபர் போன்ற முன்னாள் வீரர்கள் எச்சரித்திருந்தனர்.

அந்த நிலையில் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு இவர் தடுமாறுவார் என்பதை ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக செயல்பட்ட போது நன்கு தெரிந்து வைத்திருந்த பிரண்டன் மெக்கலம் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் பால்கனியில் அமர்ந்து கொண்டே ஒற்றை செய்கையால் அவுட்டாக்கியது வைரலானது. அதனால் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா போல ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு தடுமாறுகிறார் என்பதை உலகின் அனைத்து அணிகளும் தெரிந்து கொண்டு சமீப காலங்களில் அவர் களமிறங்கினாலே அந்த பந்துகளை வீசி இவரின் கதையை முடிக்கின்றனர்.

- Advertisement -

அதைவிட இங்கிலாந்து டி20 தொடரிலும் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் சூரியகுமார் யாதவ் இந்தியாவின் வெற்றிக்காக போராடிய போது இவர் டெஸ்ட் இன்னிங்ஸ் போல மெதுவாக விளையாடியது இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது. அதனால் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளான அவர் கடைசி டி20 போட்டியில் 64 (40) ரன்கள் குவித்ததாலும் வேகத்துக்கு சாதகமான ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் தடுமாறுவார் என்பதை உணர்ந்த தேர்வுக்குழு ஆசிய கோப்பை அணியில் ஸ்டேண்ட்-பை வீரராக மட்டுமே தேர்வு செய்துள்ளது.

ஹூடாவுக்கு வாய்ப்பு:
அவருக்கு பதிலாக கடந்த பிப்ரவரியில் அறிமுகமாகி ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து அதன்பின் நடந்த அயர்லாந்து டி20 தொடரில் சஞ்சு சாம்சனுடன் 176 ரன்கள் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்து சதமடித்த (104) தீபக் ஹூடா நேரடியாக 11 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதை ரசிகர்கள் மனதார வரவேற்கின்றனர்.

- Advertisement -

ஏனெனில் அனைத்து சூழ்நிலைகளிலும் அதிரடியாக பேட்டிங் செய்யும் திறமை பெற்றுள்ள அவர் பந்துவீச்சில் நிறைய போட்டிகளில் முதன்மை சுழல் பந்துவீச்சாளர்களுக்கு ஈடாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுப்பவராக உள்ளார்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2022 : திறமையான 2 இளம் வீரர்களை செலக்ட் பண்ணாத தேர்வுக்குழுவை விளாசும் ரசிகர்கள்

எனவே நல்ல ஆல்-ரவுண்டராகவும் இளம் வீரராக இருக்கும் அவர் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் திறனைப் பெற்றிருப்பதால் இந்த ஆசிய கோப்பையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் அசத்தும் பட்சத்தில் டி20 உலகக் கோப்பையிலும் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement