- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பெரிய பெயர்களை வீட்டுக்கு அனுப்புனாலே வெற்றி தாமாக வரும் – இலங்கை தோல்வியின் வேதனையால் ரசிகர்கள் அதிருப்தி

ஐக்கிய அரபு நாடுகளில் வரலாற்றில் 15வது முறையாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழ்வதால் இம்முறையும் எளிதாக வென்று 8வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல் கடந்த டி20 உலகக் கோப்பைக்குப்பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்ற அனைத்து தொடரிலும் தோல்வியடையாமல் வென்ற இந்தியா இந்த தொடரின் லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கு எளிதாக சென்றது.

அதனால் கோப்பை உறுதியென்று இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இருந்த நிலைமையில் வழக்கம் போல் நாக் அவுட் சுற்றுக்கு நிகரான சூப்பர் 4 சுற்றில் வேலையை காட்டத் துவங்கிய இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக மண்ணைக் கவ்வியதால் வென்றே தீரவேண்டும் என்ற வாழ்வா சாவா சூழ்நிலையில் செப்டம்பர் 6ஆம் தேதியான நேற்று இலங்கை எதிர்கொண்டு மீண்டும் பேட்டிங்கில் தடுமாறி 173/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதை அசால்ட்டாக சேசிங் செய்த இலங்கை ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது.

- Advertisement -

பெரிய தலைகள்:
மறுபுறம் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் வழக்கம் போல சொதப்பிய இந்தியாவின் பைனல் வாய்ப்பு 99% குறைந்து போயுள்ளது. இதில் சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டு பலவீனமான அணியாக மாறிய இலங்கை கூட இளம் வீரர்களை வைத்து அற்புதமாக செயல்பட்டு வெற்றி கண்டுள்ளது. ஆனால் உலகமகா ஆகாய சூரர்கள் என்ற பெயரைக் கொண்ட கேஎல் ராகுல், விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், சஹால் என நட்சத்திர வீரர்களை கொண்டிருந்தும் இந்திய அணி தோற்றது தான் இந்திய ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இவர்கள் இந்த ஆசிய கோப்பையிலேயே திணறுகிறார்கள் என்றால் டி20 உலகக் கோப்பையை எங்கே வெல்லப் போகிறார்கள் என்ற பயமும் இப்போதே ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

1. ஏனெனில் இந்த தொடரில் மேற்குறிப்பிட்ட யாருமே தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படவில்லை என்பதே நிதர்சனம். இதில் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள விராட் கோலியாவது முதல் 3 போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த இந்திய பேட்ஸ்மேனாக பார்முக்கு திரும்பி விமர்சனங்களை நொறுக்கும் அளவுக்கு ஓரளவு சிறப்பாக செயல்பட்டார்.

2. ஆனால் பொறுப்புடன் செயல்பட வேண்டிய கேப்டன் ரோகித் சர்மா இலங்கைக்கு எதிரான போட்டியை தவிர்த்து எஞ்சிய போட்டிகளில் சுமாராக செயல்பட்டார். அதைவிட துணை கேப்டன் என்ற பெயருடன் விளையாடும் கேஎல் ராகுல் எந்த ஒரு போட்டியிலும் வெற்றிக்கு பங்காற்றாமல் மாறாக மெதுவாக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

- Advertisement -

3. அத்துடன் வெறும் ஒரு வருடம் சிறப்பாக விளையாடியதை வைத்து இந்தியாவின் ஏபிடி என ரசிகர்கள் கொண்டாடும் சூர்யகுமார் யாதவ் கத்துக்குட்டி ஹாங்காங்கை மட்டும் புரட்டி எடுத்து எஞ்சிய போட்டிகளில் ஏமாற்றினார்.

5. ஹர்டிக் பாண்டியாவும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் அட்டகாசமாக செயல்பட்டு பின்னர் ஏமாற்ற தினேஷ் கார்த்திக்கை நம்பாமல் வாய்ப்பை பெற்ற ரிஷப் பண்ட் வழக்கம் போல பேட்டிங்கிலும் விக்கெட் கீப்பிங்கிலும் மோசமாக செயல்பட்டார்.

- Advertisement -

6. அதைவிட ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் என்ற 2 முக்கிய பவுலர்கள் காயத்தால் வெளியேறியதால் பொறுப்புடன் செயல்பட வேண்டிய சீனியர் புவனேஸ்வர் குமார் சூப்பர் 4 சுற்றின் 2 போட்டிகளிலும் 19வது ஓவரில் முறையே 19, 14 ரன்களை வாரி வழங்கி 20வது ஓவரை வீசிய இளம் அரஷ்தீப் சிங்கிற்கு அழுத்தத்தை ஏற்படுத்தினார்.

7. அதேபோல் முதன்மை சுழல்பந்து வீச்சாளர் என்ற பெயருடைய சஹால் எந்த போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தி துல்லியமாக பந்துவீசி நிறைய விக்கெட்டுகளை எடுக்கவில்லை.

ரசிகர்கள் ஆதங்கம்:
அதற்காக அனைத்துப் போட்டிகளிலும் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறவில்லை. அது சாத்தியமும் கிடையாது. ஆனால் அனைத்துப் போட்டிகளிலும் மேற்குறிப்பிட்ட வீரர்களில் பாதியளவு கூட தொடர்ந்து சிறப்பாக செயல்படவில்லை என்பதாலேயே இந்த தோல்வி பரிசாக கிடைத்துள்ளது. ஆனால் இதே வீரர்கள் ஐபிஎல் தொடரில் கோடிகளுக்காக உயிரைக் கொடுத்து விளையாடி வெற்றியை பெற்று கொடுக்கிறார்களே என்பதே ரசிகர்களின் வேதனையான கருத்தாக உள்ளது.

அத்துடன் சாதாரண இருதரப்பு தொடர்களில் சக்கை போடு போடும் இவர்கள் இதுபோன்ற பல அணிகள் பங்கேற்கும் பெரிய தொடர்களில் சொதப்புவது ஏன் என்று தெரியாமல் ரசிகர்கள் புலம்புகின்றனர். அதைவிட சமீப காலங்களில் தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து போன்ற தொடர்களில் இந்தப் பெரிய பெயருடைய வீரர்கள் இல்லாமலேயே தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், சுப்மன் கில் போன்ற தரமான இளம் வீரர்களை வைத்து இந்தியா வென்றதை ரசிகர்கள் சுட்டி காட்டுகின்றனர். அதனால் இந்தப் பெரிய தலைகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தாலே இந்தியா தாமாக முக்கிய போட்டிகளில் வெல்ல ஆரம்பித்து விடும் என்று வேதனையுடன் அவர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -
Published by