இன்னுமா இவர நம்பிட்டு இருக்கீங்க.. தோல்விக்கு காரணமான முக்கிய வீரரை நீக்குமாறு.. ரசிகர்கள் விளாசல்

Shubman Gill
- Advertisement -

ஹைதராபாத் நகரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் இந்தியாவை தோற்கடிப்போம் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்ததை முதல் போட்டியில் செய்து காட்டிய இங்கிலாந்து 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

மறுபுறம் இப்போட்டியில் ஆரம்பத்திலேயே இங்கிலாந்தை 246 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா பின்னர் 436 ரன்கள் குவித்து அசத்தியது. அதனால் 190 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓலி போப் 196 ரன்கள் குவித்து இங்கிலாந்தை காப்பாற்றினார். கடைசியில் இங்கிலாந்து நிர்ணயித்த 231 ரன்களை துரத்திய இந்தியா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 202 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இன்னுமா நம்புறீங்க:
அந்த வகையில் முதல் 3 நாட்கள் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா 4வது நாள் சொதப்பி தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோல்விக்கு பேட்டிங் துறையில் சில வீரர்கள் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக சமீப காலங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 23 ரன்கள் எடுத்த நிலையில் முக்கியமான 2வது இன்னிங்ஸில் டக் அவுட்டாகி இந்தியாவின் காலை வாரினார்.

மேலும் கடந்த 11 இன்னிங்ஸில் முறையே 13, 18, 6, 10, 29, 26, 36, 10, 23, 0 என வெறும் 173 ரன்களை 17.30 என்ற மோசமான சராசரியில் எடுத்துள்ள அவர் ஒரு அரை சதம் கூட அடித்ததில்லை. குறிப்பாக கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவில் தடுமாறிய அவர் தற்போது பிறந்து வளர்ந்த சொந்த மண்ணிலேயே 50 ரன்கள் கூட அடிக்க முடியாமல் தடுமாறுவது ரசிகர்களை கடுப்பாக வைக்கிறது.

- Advertisement -

இது போக ஒட்டு மொத்தமாகவே தம்முடைய கேரியரில் இதுவரை 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 39 இன்னிங்ஸில் 1063 ரன்களை 29.53 என்ற சுமாரான சராசரியில் எடுத்துள்ளார். அதற்குள் 3 முறை டக் அவுட்டாகியுள்ளார். அந்த வகையில் சொந்த மண்ணிலேயே தடுமாறும் இவரை இன்னுமா நம்புகிறீர்கள் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

இதையும் படிங்க: அவங்க 2 பேரும் போட்டியை 5 ஆவது நாளுக்கு எடுத்துட்டு போவாங்கனு நெனச்சேன் – ரோஹித் சர்மா ஏமாற்றம்

எனவே இளம் வீரராக இருக்கும் அவரை இப்போதைக்கு அணியிலிருந்து நீக்கி உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வைத்து வாய்ப்பின் அருமையை உணர்த்துமாறு ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அந்த நேரத்தில் ருத்ராஜ் கைக்வாட், சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement