அவங்க 2 பேரும் போட்டியை 5 ஆவது நாளுக்கு எடுத்துட்டு போவாங்கனு நெனச்சேன் – ரோஹித் சர்மா ஏமாற்றம்

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி துவங்கி போட்டியின் நான்காம் நாளான இன்றுடன் நிறைவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது கடைசி இன்னிங்ஸ்சில் இந்திய அணிக்கு 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயிக்கப்பட்டதால் நிச்சயம் இந்திய அணி எளிதில் இந்த ரன்களை அடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் துவக்க வீரரான ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்ததிலிருந்து இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கவே ஒரு கட்டத்தில் 119 ரன்களுக்கு எல்லாம் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

ஆனாலும் 8-ஆவது விக்கெட்டுக்கு கே.எஸ் பாரத் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். ஒரு கட்டத்தில் பரத் மற்றும் அஸ்வின் ஆகியோர் விளையாடி வந்ததை பார்த்தபோது நிச்சயம் இந்திய அணி நான்காம் நாள் முழுவதுமாக விளையாடிவிட்டு ஐந்தாம் நாளில் எஞ்சிய மூன்று விக்கெட்டுகளை வைத்து வெற்றிக்காக போராடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் போட்டியின் இறுதி நேரத்தில் எஞ்சியிருந்த 3 விக்கெட்டையும் இங்கிலாந்து வீரர் ஹார்ட்லி வீழ்த்தி அந்த அணிக்கு வெற்றி தேடித்தந்தார். அதிலும் குறிப்பாக போட்டி முடிய கடைசி சில ஓவர்களே இருந்த வேளையில் இந்திய வீரர்கள் அவசரப்பட்டு ஆட்டம் இழந்தது தோல்வியை உறுதி செய்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து வருத்தம் தெரிவித்திருந்த ரோகித் சில முக்கிய விடயங்களை பகிர்ந்திருந்தார். அந்த வகையில் ரோகித் கூறுகையில் :

- Advertisement -

இன்றைய நாள் ஆட்டத்தின் கடைசியில் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் நிச்சயம் போட்டியை ஐந்தாவது நாளுக்கு கொண்டு செல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். கடைசி நாளில் 20 முதல் 30 ரன்கள் வரை அடிக்கும் நிலை இருந்தால் வெற்றிக்கான வாய்ப்பும் இருந்திருக்கலாம். இந்த போட்டியில் பின்வரிசையில் விளையாடிய அனைவரும் மிகுந்த போராட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் டாப் ஆர்டர் வீரர்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : அந்த 2 பேரும் இந்தியாவை சாய்ச்சுட்டாங்க.. அந்த 250 ரன்ஸ் தான் நம்ம தோல்விக்கு காரணம்.. சச்சின் ஆதங்கம்

இதுபோன்ற அழுத்தமான போட்டிகளில் தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் இன்றைய போட்டியில் நாங்கள் தைரியமாக விளையாடவில்லை என்று நினைக்கிறேன். அதேபோன்று எங்களுக்கு கிடைத்த சில வாய்ப்புகளையும் பேட்டிங்கில் எடுக்க தவறிவிட்டோம். இதுபோன்ற சில நிகழ்வுகள் கிரிக்கெட்டில் சகஜமான ஒன்றுதான். இது தொடரின் முதல் போட்டிதான் எனவே இதிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் வெற்றிகரமாக திரும்பவும் என ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement