19 விக்கெட்ஸ்.. இந்தியா மட்டும் ஏமாளியா வாகன்? 100 வருட வரலாறு காணாத பிட்ச் பற்றி ரசிகர்கள் கேள்வி

Perth Day 2
- Advertisement -

வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 2025/26 சீசன் நவம்பர் 21ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது. ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்தை சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலியா வெறும் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி மிரட்டியது.

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஓலி போப் 46, ஹாரி ப்ரூக் 56, ஜேமி ஸ்மித் 33, பென் டக்கெட் 21 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் மிட்சேல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்ததாக விளையாடும் ஆஸ்திரேலியாவுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இங்கிலாந்து காண்பித்து வருகிறது.

- Advertisement -

மோசமான பிட்ச்:

ஏனெனில் வேகத்துக்கு சாதகமாக இருக்கும் பெர்த் பிட்ச்சில் இங்கிலாந்தின் நல்ல பந்து வீச்சில் திண்டாடும் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 123/9 ரன்கள் எடுத்துள்ளது. கைவசம் 1 விக்கெட்டை மட்டுமே வைத்துள்ள ஆஸ்திரேலியா இன்னும் 49 ரன்கள் பின்தங்கியுள்ளது. அதனால் அபார துவக்கத்தைப் பெற்றுள்ள இங்கிலாந்துக்கு கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 5* விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

முன்னதாக இப்போட்டியின் முதல் நாளிலேயே கொத்தாக 19 விக்கெட்டுகள் விழுந்துள்ளது. இதன் வாயிலாக கடந்த 100 வருடங்களில் நடைபெற்ற ஒரு ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் முதல் நாளிலேயே அதிக விக்கெட்டுகள் விழுந்த போட்டியாக இப்போட்டி மோசமான சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2001 ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற ஆஷஸ் போட்டியில் 17 விக்கெட்டுகள் விழுந்ததே முந்தைய சாதனை.

- Advertisement -

இந்தியா மட்டும் இளிச்சவாயா:

அந்தளவுக்கு பெர்த் மைதானத்தின் பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக இருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் அதைப்பற்றி மைக்கேல் வாகன், ப்ராட் ஹாடின் ஆகிய இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் வீரர்கள் யாருமே இதுவரை விமர்சிக்கவில்லை. மறுபுறம் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியா – தென்னாப்பிரிக்கா மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் பிட்ச் ஒருதலைபட்சமாக இருந்ததாக மைக்கேல் வாகன், ப்ராட் ஹாடின் விமர்சித்தார்கள்.

இதையும் படிங்க: பும்ரா, கும்ப்ளே போல 1982க்குப்பின் ஸ்டோக்ஸ் சாதனை.. 123/9 என ஆஸியை பதிலுக்கு தெறிக்க விட்ட இங்கிலாந்து

அது மட்டுமின்றி இந்தியாவில் டெஸ்ட் போட்டி 3 நாட்களுக்குள் முடிந்து விட்டால் உடனே இந்தியா குறுக்கு வழியில் பிட்ச்களை அமைப்பதாக வெளிநாட்டை சேர்ந்தவர்கள் விமர்சிப்பது வழக்கமாகும். ஆனால் இப்போது அதே வெளிநாட்டவர்கள் பெர்த் பிட்ச் பற்றி வாய் திறக்காமல் இருக்கிறார்கள். அதனால் இந்தியா மட்டும் இளிச்சவாயா? என்று ட்விட்டரில் மைக்கேல் வாகன் போன்றவர்களை தேடிச்சென்று இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement