இதுக்கு பாண்டியா பரவால்ல போலயே.. கேப்டன் பட் கமின்ஸ் மீது ரசிகர்கள் அதிருப்தி.. காரணம் என்ன?

Pat Cummins and Carey
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முடிந்த 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி த்ரில் வெற்றி பெற்றது. மேலும் ஏற்கனவே முதல் போட்டியில் வென்றிருந்த ஆஸ்திரேலியா இந்த வெற்றியும் சேர்த்து 2 – 0 (2) என்ற கணக்கில் நியூசிலாந்தை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து கோப்பையை வென்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது.

கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 279 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு ஸ்மித் 9, கவாஜா 11, லபுஸ்ஷேன் 6, கேமரூன் கிரீன் 5, டிராவிஸ் ஹெட் 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 80/5 என சரிந்த ஆஸ்திரேலியாலின் வெற்றி கேள்விக்குறியான போது மிட்சேல் மார்ஷ் – அலெக்ஸ் கேரி ஆகியோர் நங்கூரமாக விளையாடி 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றினர்.

- Advertisement -

ரசிகர்கள் அதிருப்தி:
அதில் மிட்சேல் மார்ஷ் 80 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த கேப்டன் பட் கமின்ஸ் தன்னுடைய பங்கிற்கு சிறப்பாக விளையாடினார். அதே போல எதிர்புறம் தொடர்ந்து அசத்திய அலெக்ஸ் கேரி 65வது ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் பவுண்டரி அடித்து 2வது பந்தில் சிங்கிள் எடுத்து 98* ரன்களை தொட்டார்.

அதன் பின் 3, 4, 5 ஆகிய பந்துகளில் ரன்கள் எடுக்காத பட் கமின்ஸ் கடைசி பந்தையும் அடிக்காமல் அலெக்ஸ் கேரிக்கு அடுத்த ஓவரில் ஸ்ட்ரைக் கொடுத்து சதமடிக்க உதவுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை செய்யாத அவர் கடைசி பந்தில் நேர்த்தியான பவுண்டரி அடித்து 32* (44) ரன்களுடன் ஃபினிஷிங் கொடுத்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார். அதன் காரணமாக 80/5 என்ற சரிந்த போது முழு மூச்சை கொடுத்து ஆஸ்திரேலியாவை வெற்றி பாதைக்கு அழைத்து வந்த இளம் வீரர் அலெக்ஸ் கேரி சதத்தை தொட முடியுமாமல் 98* ரன்களுடன் இன்னிங்ஸை முடித்தார்.

- Advertisement -

அதை பார்த்த ரசிகர்கள் கேப்டனாக தனது அணியின் இளம் வீரருக்கு சதமடிக்கும் வாய்ப்பை கொடுத்தால் என்ன? என்று பட் கமின்ஸ் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக 2023 பார்டர் – கவாஸ்கர் போன்ற சமீப கால தொடர்களில் அலெக்ஸ் கேரி பெரிய ரன்கள் எடுக்கவில்லை. எனவே அவருக்கு இந்த சதத்தை அடிக்கும் வாய்ப்பை கொடுத்திருந்தால் இன்னும் உத்வேகம் கிடைத்திருக்குமே என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க: 2024 ஐ.பி.எல் தொடரில் விளையாடுவது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ

முன்னதாக கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இளம் இந்திய வீரர் திலக் வர்மா அரை சதமடிக்க தயாரான போது அதை இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுண்டரி அடித்து தடுத்தார். அதை மிஞ்சும் அளவுக்கு இங்கே தன்னுடைய இளம் வீரரின் சதத்தை பட் கமின்ஸ் தடுத்துள்ளார். அதனால் இதற்கு பாண்டியா எவ்வளவோ பரவாயில்லை போல என்று பட் கமின்ஸை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement