2024 ஐ.பி.எல் தொடரில் விளையாடுவது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ

SKY
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-ஆவது சீசனானது மார்ச் 22-ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது தங்களது அணி வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

இவ்வேளையில் ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை கோப்பையை கைப்பற்றி மீண்டும் முதலிடத்திற்கு வர வேண்டும் என்பதற்காக அணியில் பல மாற்றங்களை செய்து தற்போது கோப்பையை வெல்லும் முனைப்புடன் பயிற்சி முகாமில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக பார்க்கப்படும் சூரியகுமார் யாதவ் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக விளையாடிய அவர் அதற்கு பிறகு ஏற்பட்ட காயம் காரணமாக எந்த தொடரிலும் விளையாடாமல் இருந்து வருகிறார்.

ஏற்கனவே காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவைசிகிச்சை செய்து கொண்ட அவர் தற்போது ஸ்போர்ட்ஸ் ஹெரனியா என்கிற குடல் இறக்க பாதிப்பிற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன் காரணமாக அவரால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் சூரியகுமார் யாதவ் கூறியதாவது : நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்னுடைய உடற்தகுதி குறித்த பல்வேறு சந்தேகங்கள் நிலவி வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நான் ஹெரனியா அறுவை சிகிச்சை மேற்கொண்டது உண்மைதான். அதை தவிர்த்து காலில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது.

இதையும் படிங்க : சென்னை டூ தரம்சாலா.. 50 ஆயிரம் செலவு செய்து சென்ற 2 இளைஞர்களுக்கு இன்பப்பரிசு வழங்கிய – ரவிச்சந்திரன் அஷ்வின்

தற்போது முழு உடற்தகுதியை எட்டும் பணியில் நான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன். உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. விரைவில் உங்களை களத்தில் சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கையில் : நிச்சயம் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடி தனது திறனை நிரூபித்து டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முக்கிய வீரராக இடம் பிடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement