
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த வீரராக உலக சாதனை படைத்துள்ள அவர் டி20 கிரிக்கெட்டில் எப்படி போட்டாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் வித்தியாசமான ஷாட்டுகளால் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்கவிடும் வல்லமை கொண்டவர்.
அதனாலேயே அவரை மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று பலரும் பாராட்டுவது வாடிக்கையாகும். அதே போல ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடிய அவர் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். இருப்பினும் ஆர்சிபி அணிக்காகவும் தென்னாபிரிக்காவுக்காகவும் ஒரு கோப்பையை வெல்லாமல் ஓய்வு பெற்றார் என்பது டீ வில்லியர்ஸ் கேரியரில் உள்ள பெரிய குறையாக பார்க்கப்படுகிறது.
ஆனால் அவர் சாம்பியன் வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் பார்த்தீவ் படேல் சமீபத்தில் ஒரு யூடியூப் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் விரைவாக அவுட்டாக்க 360 டிகிரி பேட்ஸ்மேனான ஏபி டீ வில்லியர்ஸ் ஏதேனும் பலவீனத்தைக் கொண்டிருக்கிறாரா என்று நான் தொகுப்பாளர்கள் கேட்டார். அதற்கு பார்திவ் படேல் கூறியது பின்வருமாறு.
“எந்த பலவீனமும் இல்லை. அவரிடம் இது நாக் அவுட் அல்லது ஃபைனல் மேட்ச் என்று மட்டும் சொல்லுங்கள். பின்னர் நடப்பதை பாருங்கள்” என்று சொன்னார். அதாவது நாக் அவுட் அல்லது ஃபைனல் போன்ற அழுத்தமான போட்டிகளில் ஏபி டீ வில்லியர்ஸ் கை கால் ஓடாததைப் போல் சுமாராக விளையாடுவார் என்று பார்திவ் படேல் கூறினார். அதுவே அவருடைய பலவீனம் என்று பார்த்தீவ் பட்டேல் கலாய்க்கும் வகையில் பேசினார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதைப் பார்த்த ஆர்சிபி ரசிகர்கள் ஜாம்பவான் என்று பார்க்காமல் இப்படி பேசுவதெல்லாம் தேவையா என்று அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். குறிப்பாக 2016 ஐபிஎல் தொடரின் குவாலிபயரில் 29-5 என தடுமாறிய போது ஏபி டீ வில்லியர்ஸ் 79* (47) ரன்கள் குஜராத்துக்கு எதிராக வெற்றி பெற வைத்ததை பார்க்கவில்லையா என்று அவருக்கு பதிலடி கொடுக்கின்றனர்.
இதையும் படிங்க: மூளையை யூஸ் பன்னலன்னா இதை செய்ய முடியாது தம்பி.. அபிஷேக் சர்மா மீது யுவராஜ் அதிருப்தி
அத்துடன் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் போட்டிகளில் டீ வில்லியர்ஸ் 294 ரன்களை 36.75 சராசரியில் எடுத்துள்ளார். மேலும் 2015 உலகக்கோப்பை செமி பைனலில் அவர் 65* (45) ரன்கள் குவித்து அசத்தினார். ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் டீ வில்லியர்ஸ் 8 நாக் அவுட் இன்னிங்ஸில் 229 ரன்களை எடுத்து தம்மால் முடிந்த வரை சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆனால் நீங்கள் தான் நான் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை என்று பார்திவ் படேலுக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.