மூளையை யூஸ் பன்னலன்னா இதை செய்ய முடியாது தம்பி.. அபிஷேக் சர்மா மீது யுவராஜ் அதிருப்தி

yuvraj singh
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 7 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் மாநிலம் குவாலியர் நகரில் அக்டோபர் ஆறாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசத்தை 127 ரன்களுக்கு இந்தியா சுருட்டியது. அதைத் தொடர்ந்து சேசிங் செய்த இந்தியா 11.5 ஓவரில் இலக்கை தொட்டு வெற்றி பெற்றது.

அதனால் சவால் விட்ட வங்கதேசத்தை மீண்டும் அடித்து நொறுக்கிய இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. முன்னதாக அந்தப் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 2 பவுண்டரி ஒரு சிக்சரை அடித்து அதிரடியான துவக்கத்தை கொடுத்தார். அதனால் தொடர்ந்து வெளுத்து வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 16 (15) ரன்களில் ரன் அவுட்டானார்.

- Advertisement -

யுவராஜ் அதிருப்தி:

அதனால் அவர் ஏமாற்றத்துடன் சென்றாலும் மற்ற பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். இந்நிலையில் தம்முடைய இன்ஸ்டாகிராமில் “ஒவ்வொரு ரன்னும் ஒவ்வொரு பந்தும் அணிக்காக. இந்தத் தொடர் நன்றாக துவங்கியுள்ளது” என்று அபிஷேக் சர்மா பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ஒரு ரசிகர் “உங்களின் ஆட்டத்தை பார்க்கும் போது விரைவில் ஒரு பெரிய ஸ்கோர் வருவது போல் தெரிகிறது” என்று அவருக்கு பதிலளித்தார்.

அந்த ரசிகருக்கு முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் யுவராஜ் சிங். “அது நம்முடைய மூளையை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே நடக்கும்” என்று பதிலளித்துள்ளார். அதாவது திறமை இருந்தாலும் அதை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே பெரிய ஸ்கோர் அடிக்க முடியும் என்று அபிஷேக் சர்மா மீது யுவராஜ் சிங் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

கம்பேக் கொடுப்பாரா அபிஷேக்:

கடந்த காலங்களில் ஐபிஎல் தொடரிலும் இந்திய அணிக்காகவும் தாம் சிறப்பாக விளையாட யுவராஜ் சிங் தான் காரணம் என்று அபிஷேக் சர்மா பலமுறை கூறியுள்ளார். அதே போல அபிஷேக் ஷர்மா இப்படி அவுட்டாகும் போது குருவாக யுவராஜ் தவறை சுட்டிக் காட்டியுள்ளார். பின்னர் அந்தத் தவறுகளில் இருந்து முன்னேறி அபிஷேக் சர்மாவும் அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க: முடிவுக்கு வந்த பாகிஸ்தான் கேப்டனின் 1524 நாட்கள் சோகம்.. பாபர் அசாம் ஆட்டத்தை பார்த்து தூங்கிய ரசிகர்கள்

குறிப்பாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தனது முதல் போட்டியிலேயே அபிஷேக் சர்மா டக் அவுட்டானார். ஆனால் அடுத்த போட்டியிலேயே 48 பந்துகளில் வெளுத்து வாங்கிய அவர் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதே போல இம்முறையும் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அபிஷேக் ஷர்மா பெரிய ரன்கள் குவிப்பார் என்று நம்பலாம்.

Advertisement