- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த 2 பேரை விட மோசமாகிட்டாரா? ஷமியை பழி வாங்கி கேரியரை முடித்த தேர்வுக்குழு? ரசிகர்கள் விளாசல்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. புத்தாண்டில் நடைபெறும் அத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து குணமடைந்துள்ளதால் துணைக் கேப்டனாக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சுத் துறையில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் முகமது சிராஜ் நீண்ட நாட்கள் கழித்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவருடன் முகமது ஷமி தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2023 உலகக் கோப்பையில் லேசான காயத்துடன் நெருப்பாக பவுலிங் செய்த அவர் இந்தியா ஃபைனல் செல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

ஷமியின் கேரியர்:

அதன் பின் காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவரால் 2024/25 ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வரை விளையாட முடியவில்லை. இறுதியாக குணமடைந்த ஷமி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடி 8 விக்கெட்டுகள் எடுத்து இந்தியா கோப்பையை வெல்ல தன்னுடைய பங்காற்றினார். ஆனால் அப்போதிலிருந்து இதுவரை அவருக்கு இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அது பற்றி கேட்டதற்கு ஃபிட்டாக இல்லாத காரணத்தாலேயே அவரை தேர்ந்தெடுக்கவில்லை என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்தார். அப்போது ரஞ்சிக்கோப்பையில் பெங்கால் அணிக்காக சிறப்பாக பந்து வீசிய ஷமி தம்முடைய ஃபிட்னஸ் மற்றும் ஃபார்மை நிரூபித்தார். அத்துடன் ரஞ்சிக் கோப்பையில் விளையாட முடிகின்ற தம்மால் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

ரசிகர்கள் விளாசல்:

அதற்கு ஒருவேளை ஷமி ஃபிட்டாக இருந்தால் ஆஸ்திரேலியா சென்ற இந்திய ஒருநாள் அணியில் இருந்திருப்பார் என்று அகர்கர் பதிலளித்தார். அதே சமயம் வருங்காலங்களில் அவர் ஃபிட்டாக மாறினால் கதை மாறலாம் என்றும் அகர்கர் தெரிவித்தார். ஆனால் அடுத்ததாக நடைபெற்ற விஜய் ஹசாரே, சயீத் முஸ்டாக் அலி உள்ளூர் ஒருநாள், டி20 தொடர்களில் சிறப்பாக விளையாடிய ஷமி மீண்டும் தம்முடைய ஃபிட்னஸையும் ஃபார்மையும் நிரூபித்தார். ஆனாலும் எதிர்த்துப் பேசியதால் அவரை பழி வாங்க நினைத்த தேர்வுக்குழு கடந்த தென்னாப்பிரிக்கா தொடரில் கழற்றி விட்டது.

இதையும் படிங்க: சிராஜ், ஸ்ரேயாஸ் பேக்.. நியூஸிலாந்து ஒருநாள் தொடருக்காக இந்திய அணி அறிவிப்பு.. லிஸ்ட் இதோ

அதே போல தற்போது நியூசிலாந்து தொடரிலும் கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு அவருடைய கேரியரை முடிக்க பார்ப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர். அத்துடன் தென்னாப்பிரிக்க தொடரில் ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சுமாராக பந்த வீசி இந்தியாவுக்கு பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் அவர்களுக்கு நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் ஷமிக்கு இடம் கிடைக்கவில்லை. அதனால் அந்த இருவரைக் காட்டிலும் ஷமி மோசமாகி விட்டாரா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -