- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இவர வெச்சுகிட்டு கனவுல கூட நாம இங்கிலாந்தாக முடியாது – எத்தனை மேட்ச்ல தான் 9 பேட்டருடன் விளையாடுவது? ரசிகர்கள் வேதனை

தாக்கா கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 22ஆம் தேதியன்று வங்கதேசம் – இந்திய அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதல் போட்டியில் ஏற்கனவே வென்று 1 – 0* என்ற கணக்கில் இத்தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில் குறைந்தபட்சம் வைட்வாஷ் தோல்வியை தவிர்க்கும் முயற்சியுடன் இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து 227 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 84 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் போராடி 314 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக 94/4 என இந்தியா தடுமாறிய போது 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய ரிசப் பண்ட் 93 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்களும் குவித்தனர். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டைஜுல் இஸ்லாம் மற்றும் சாகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய அந்த அணி மீண்டும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 231 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 73 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

தடவல் இந்தியா:
அதனால் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு 3வது நாளில் 3 மணிக்கு கிடைத்தது. அப்போது சுமார் ஒன்றரை மணி நேரங்கள் இருந்ததால் அதிரடியாக விளையாடி இன்றே வென்று விடும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மீண்டும் தனி ஒருவனாக வந்த மெஹதி ஹசன் சுழலில் சிக்கிய சுப்மன் கில் 7, புஜாரா 6, விராட் கோலி 1 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் 3வது நாள் முடிவில் 45/4 என்ற நிலையில் தடுமாறும் இந்தியா இன்னும் 100 ரன்கள் எடுத்து எப்படியாவது வென்றால் போதும் என்ற பரிதாப நிலையை இந்திய ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.

முன்னதாக ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறிய இங்கிலாந்து ஸ்டோக்ஸ் – மெக்கல்லம் ஆகியோரது வருகைக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி இந்தியா உட்பட எதிரே வரும் அனைத்து அணிகளையும் அடித்து நொறுக்கி வெற்றி நடை போட்டு வருகிறது. அந்த நிலையில் அவர்களை விட இந்தியா தன்னுடைய ஸ்டைலில் அதிரடியாக விளையாடுவதை இத்தொடரில் பார்ப்பீர்கள் என்று முதல் போட்டிக்கு முன்பாக தற்காலிக கேப்டன் ராகுல் கெத்தாக பேசினார். ஆனால் 20, 22, 10 என இந்த தொடரில் ஏற்கனவே தடவல் பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் கடைசி இன்னிங்ஸிலும் 146 ரன்களை துரத்தும் போது வெறும் 0 ரன்னில் கேட்ச் வாய்ப்பில் தப்பியும் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்.

சமீபத்திய ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பைகளில் அதிரடியாக விளையாட வேண்டிய ஓப்பனிங் பேட்ஸ்மேனாக தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்தியாவின் தோல்விகளுக்கு காரணமாக அமைந்த அவர் இந்த டெஸ்ட் தொடரிலும் அதுவும் கேப்டனாக அதை விட மோசமான செயல்பாடுகளையே வெளிப்படுத்தியுள்ளார். அப்படி 3 வகையான கிரிக்கெட்டிலும் சொதப்பும் அவர் துணை கேப்டன் என்ற பெயருடன் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருவதால் எத்தனை நாட்கள் வெறும் 9 பேட்ஸ்மேன்களுடன் இந்தியா விளையாடுவதை பார்க்கும் காலம் நீடிக்குமோ என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள்.

அத்துடன் இவரைப் போன்ற தகவல் நாயகன்களை வைத்துக்கொண்டு கனவில் கூட இந்தியாவால் இங்கிலாந்தை போல அதிரடியாக விளையாட முடியாது என்றும் இந்திய ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதற்காக இப்போட்டி நடைபெறும் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கிறதே? என்று மட்டும் சொல்லாதீர்கள். ஏனெனில் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற முல்தான் மற்றும் கராச்சி மைதானங்கள் இதே போன்ற சுழலுக்கு சாதகமான பேட்டிங்க்கு சவாலாக இருந்தும் இங்கிலாந்து அதிரடியாக விளையாடி எளிதாக வென்றது.

இதையும் படிங்க: வீடியோ : ஒன்னா ரெண்டா – ஒரே வீரரின் பல கேட்ச்களை விட்டு இந்தியாவுக்கு பாதகத்தை ஏற்படுத்திய விராட் கோலி

அதற்கு பென் டூக்கெட், ஜாக் கிராவ்லி போன்ற தொடக்க வீரர்கள் தான் சரவெடியாக செயல்பட்டு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்கள். ஆனால் இந்திய அணியில் அந்த இடத்தில் ராகுல் போன்றவர்கள் இருப்பதால் எப்போதுமே நம்மால் இங்கிலாந்தை போல் அதிரடியாக விளையாட முடியாது என்று ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

- Advertisement -
Published by