பேசாம 2 மேட்ச் பெஞ்ச்ல உட்கார வைங்க ! நட்சத்திர சி.எஸ்.கே வீரர் மீது அதிருப்தியடைந்து கலாய்க்கும் ரசிகர்கள்

CSK MS Dhoni Ravindra Jadeja
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 4-ஆம் தேதி நடைபெற்ற 49-வது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய அணிகள் மோதின. புனேவில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 173/8 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் டு பிளேஸிஸ் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில் கேப்டன் டு ப்ளேசிஸ் 38 (22) ரன்களில் அவுட்டானார்.

Mahipal Lomror

- Advertisement -

அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல் 3 (3) ரன்களில் ரன் அவுட்டாக மறுபுறம் தடுமாறிக் கொண்டிருந்த விராட் கோலி 30 (33) ரன்களில் நடையை கட்டியதால் திடீரென அந்த அணி 79/3 என சரிந்தது. அந்த சரிவை சரிசெய்யும் வகையில் மிடில் ஆர்டரில் இளம் வீரர்கள் மஹிபால் லோம்ரோர் அதிரடியாக 42 (27) ரன்களும் ரஜத் படிடார் 26 (17) ரன்களும் எடுத்து காப்பாற்றினார். இறுதியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 26* (17) ரன்கள் எடுத்து தனது பினிஷர் வேலையை கச்சிதமாகச் செய்ய சென்னை சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் மகேஸ் தீக்சனா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

பெங்களூரு வெற்றி:
அதை அடுத்து 174 என்ற நல்ல இலக்கை துரத்திய சென்னைக்கு கடந்த போட்டியில் 182 என்ற முரட்டுத்தனமான பார்ட்னர்ஷிப் அமைத்த ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே ஜோடி இம்முறை 54 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்தபோது ருதுராஜ் 28 (23) ரன்களில் அவுட்டானார். அந்த நிலைமையில் வந்த ராபின் உத்தப்பா 1 (3) அம்பத்தி ராயுடு 10 (8) போன்ற முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டானது சென்னைக்கு பின்னடைவை ஏற்படுத்தி நிலையில் மறுபுறம் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 56 (37) ரன்கள் எடுத்து வெற்றிக்காக போராடிய கான்வேயும் 15-வது ஓவரில் ஏமாற்றத்துடன் அவுட்டானார்.

Hasaranga Moin Ali

அதனால் பெரிய பின்னடைவை சந்தித்த சென்னைக்கு அதிரடி காட்டிய மொய்ன் அலி 34 (27) ரன்களை எடுத்து ஆட்டமிழக்க அவருக்கு கை கொடுக்க வேண்டிய ரவீந்திர ஜடேஜா மீண்டும் 3 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இறுதியில் எம்எஸ் தோனியும் 2 (3) ரன்களில் அவுட்டானதால் 20 ஓவர்களில் 160/8 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை 13 ரன்கள் வித்தியாசத்தில் ஏமாற்றத்துடன் தோல்வி அடைந்தது. பெங்களூர் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

- Advertisement -

வெளியேறும் சென்னை:
இந்த வெற்றியால் பங்கேற்ற 11 போட்டிகளில் 6-வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு புள்ளி பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறி பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் உறுதியாக நீடிக்கிறது. மறுபுறம் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் முக்கியமான கடைசி நேரத்தில் சொதப்பிய சென்னை பங்கேற்ற 10 போட்டிகளில் 7-வது தோல்வியை பதிவு செய்து 9-வது இடத்தில் தத்தளிக்கிறது. இனிமேல் எஞ்சிய 4 போட்டிகளில் வென்றாலும் அந்த அணி லீக் சுற்றுடன் மும்பையை தொடர்ந்து 2-வதாக வீட்டுக்கு செல்வது உறுதியாகிவிட்டது.

Jadeja

முன்னதாக இந்த போட்டியில் கடைசி 30 பந்துகளில் வெற்றிக்கு 56 ரன்கள் தேவை என்ற நிலையில் சிறப்பாக அடித்தால் எட்டிப் பிடித்து விடலாம் என்ற நேரத்தில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா கணிசமான ரன்கள் கூட எடுக்காமல் வெறும் 3 ரன்களில் அவுட்டானது அடுத்து வந்த தோனி போன்றவர்களுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தி தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. இத்தனைக்கும் இந்த வருடம் அனுபவமே இல்லாத கேப்டன்சிப் பொறுப்பேற்ற அவர் அதன் அழுத்தம் காரணமாக பேட்டிங் பவுலிங் ஃபீல்டிங் என அனைத்திலும் மொத்தமாக சொதப்பியதால் அந்த பொறுப்பே வேண்டாம் என்று மீண்டும் தோனியிடமே ஒப்படைத்தார்.

- Advertisement -

பெஞ்சில் உட்கார வைங்க:
டி20 உலக கோப்பைக்கு முன்பாக பார்முக்கு திரும்ப வேண்டும் அதைவிட சென்னையின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் அந்த முடிவை எடுத்திருந்தார். ஆனால் கேப்டன் பொறுப்பில் விலகிய பின்பும் கேப்டன்ஷிப் அழுத்தம் இல்லாத போதிலும் 1 (1), 2 (3) என பேட்டிங்கில் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே எடுத்துள்ள அவர் பந்து வீச்சில் 1 விக்கெட் கூட எடுக்கவில்லை.

ஆனால் தோனியை (12 கோடி) விட 16 கோடி என்ற உச்சபட்ச சம்பளம் வாங்கும் அவர் இப்படி கேப்டன்ஷிப் பதவியில் இல்லாதபோதும் சொதப்பலாமா என்று பல ரசிகர்கள் அதிருப்தி வெளிப்படுத்துகின்றனர். மேலும் அவரின் இந்த வருட 118.40 ஸ்ட்ரைக் ரேட் என்பது 2016இல் இருந்ததை விட குறைவாக உள்ளது.

இதையும் படிங்க : மும்பையை தொடர்ந்து சென்னையும் பெட்டி படுக்கையை பேக் பண்ண வேண்டியதுதான் – பிளே ஆஃப் சுற்று நிலை என்ன?

அதேபோல் அவரின் 19.3 என்ற பேட்டிங் சராசரி 2018இல் இருந்ததை விட மோசமாக உள்ளது. இதனால் ஒருசில போட்டிகள் அவரை பெஞ்சில் அமர வைக்க வேண்டும் என்றும் ஒருசில ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement