இவரையா தெ.ஆ தொடரில் ட்ராப் பண்ணீங்க.. செயலால் பதிலடி கொடுத்த இந்திய வீரர்.. தேர்வுக் குழுவை விளாசும் ரசிகர்கள்

Axar Patel 2
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாத நிலைமையில் சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா இத்தொடரில் சிறப்பாக விளையாடி வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது ரசிகர்களின் மகிழ்ச்சியடைய வைத்தது.

அதிலும் குறிப்பாக 2023 உலகக் கோப்பை தோல்விக்கு நிகரானதல்ல என்றாலும் இத்தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய ஆறுதல் வெற்றி பெற்றது. முன்னதாக இத்தொடரில் இந்தியா வெற்றி பெறுவதற்கு ரிங்கு சிங், முகேஷ் குமார் உள்ளிட்ட நிறைய இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் அபாரமாக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

இவரையா ட்ராப் பண்ணீங்க:
அவர்களைப் போலவே சற்று சீனியர் வீரராக இருக்கும் அக்சர் படேல் 5 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை 6.20 என்ற மிகவும் குறைவான எக்கனாமியில் எடுத்து வெற்றியில் கருத்து குதிரையாக செயல்பட்டார். சொல்லப்போனால் ராய்ப்பூரில் நடைபெற்ற 4வது போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருது வென்ற அவர் 5வது போட்டியில் 31 ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றி மீண்டும் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

2023 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்ட அவர் கடைசி நேரத்தில் காயத்தை சந்தித்து வெளியேறிய பரிதாபத்தை சந்தித்தார். இருப்பினும் தற்போது முழுமையாக குணமடைந்து இத்தொடரில் களமிறங்கிய அவர் அடுத்தடுத்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி தன்னுடைய தரத்தை காண்பித்துள்ளார்.

- Advertisement -

ஆனால் அப்படி நல்ல ஃபார்மில் சிறந்த ஆல் ரவுண்டராக வெற்றியில் பங்காற்றி அவருக்கு அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும் இந்திய டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது வேடிக்கையான உண்மையாக இருக்கிறது. அந்த வகையில் அடுத்தடுத்த ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ள அப்சர் பட்டேல் தம்மை ஏன் தென்னாப்பிரிக்க டி20 தொடரில் தேர்வு செய்யவில்லை என்று செயலால் தேர்வுக்குழுவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: விராட் கோலியின் பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸை அங்க பார்ப்பீங்க.. எதிரணியை எச்சரித்த ஏபிடி

அதன் காரணமாக இவரையா தென்னாபிரிக்க டி20 தொடரில் தேர்வு செய்யவில்லை என்று தேர்வு குழுவினரை சமூக வலைதளங்களில் ரசிகர்களும் விமர்சித்து வருகிறார்கள். மேலும் அடுத்ததாக ஏதேனும் ஒரு வீரர் காயமடைந்தால் மீண்டும் தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கான இந்திய அணியில் அக்சர் படேலை தேர்வு செய்து உங்களுடைய தவறை திருத்திக் கொள்ளுங்கள் என்றும் தேர்வுக்குழுவுக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement