விராட் கோலியின் பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸை அங்க பார்ப்பீங்க.. எதிரணியை எச்சரித்த ஏபிடி

Ab De Villiers 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா தலைமையில் அணி இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது. அதை தொடர்ந்து அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நிறைவு செய்துள்ள இந்தியா அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

அதற்காக அறிவிக்கப்பட்ட தனித்தனியான இந்திய அணிகளில் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டுமே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய நம்பிக்கை நட்சத்திரங்கள் விளையாட உள்ளனர். கடைசியாக உலகக்கோப்பையில் விளையாடிய இவர்கள் இத்தொடரில் விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏபிடி நம்பிக்கை:
குறிப்பாக 765 ரன்கள் குவித்த விராட் கோலி ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து தொடர் நாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றிக்கு போராடி தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு முறை கூட இந்தியா டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற மோசமான வரலாற்றை மாற்றி புதிய சரித்திரம் படைப்பதற்கு விராட் கோலி அத்தொடரிலும் போராடுவார் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் தங்களுடைய சொந்த ஊரில் நடைபெறும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் சிறந்த செயல்பாடுகளை பார்க்க முடியும் என்று ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். எனவே மிகவும் கவனமாக இருங்கள் என்று தங்களுடைய தென்னாப்பிரிக்க அணியை எச்சரிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நாம் விராட் கோலியின் சிறந்த ஆட்டத்தை பார்ப்போம். குறிப்பாக அத்தொடரில் விராட் கோலி தன்னுடைய இதயத்திலிருந்து தனது கண்களால் எதிரணிகளை முறைத்து பார்த்து அனைவருக்கும் எதிராகவும் ஆக்ரோசமாக செயல்படுவதை பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை. இத்தொடரில் அவர் நெருப்பாக செயல்படுவார். எனவே தென்னாப்பிரிக்கா மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். தற்போதைய இந்திய அணி முழுவதுமாக உலகத்தரம் வாய்ந்த கிளாஸ் அனியாக இருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: அஸ்வினின் ஆல் டைம் தனித்துவ சாதனையை சமன் செய்த ரவி பிஷ்னோய்.. வருங்கால ஸ்பின்னராக அசத்தல்

முன்னதாக கடைசியாக நடைபெற்ற தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் முதல் போட்டியில் கேப்டனாக வெற்றி பெற்று கொடுத்த விராட் கோலி 2வது போட்டியில் காயத்தை சந்தித்து வெளியேறியதால் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதன் பின் 3வது போட்டியில் கம்பேக் கொடுத்த போதிலும் இந்தியா தோல்வியை சந்தித்த நிலையில் விராட் கோலி சர்ச்சைக்குரிய முறையில் தம்முடைய கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement