அஸ்வினின் ஆல் டைம் தனித்துவ சாதனையை சமன் செய்த ரவி பிஷ்னோய்.. வருங்கால ஸ்பின்னராக அசத்தல்

Ravi Bishnoi
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 ஃபைனலில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்று ஆறுதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் இல்லாமல் சூரியகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கிய இந்திய மணி டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற கடைசி போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பெங்களூரு நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஸ்ரேயாஸ் ஐயர் 53, அக்சர் படேல் 31 ரன்கள் எடுத்த உதவியுடன் 161 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதை துரத்திய ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

வருங்கால ஸ்பின்னர்:
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை வீரர்களை கண்டறிய உதவும் இத்தொடரில் ரோஹித் சர்மா போன்ற சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் நிறைய இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்று அதை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டனர்.

அந்த வகையில் இளம் ஸ்பின்னராக தமக்கு கிடைத்த வாய்ப்பில் அசத்திய ரவி பிஸ்னோய் இத்தொடரில் மொத்தம் 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர் என்ற ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினும் 9 விக்கெட் எடுத்திருந்ததே முந்தைய சாதனையாகும். 2020 அண்டர்-19 உலகக் கோப்பையில் இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய ரவி பிஸ்னோய் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் தாய் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை கடந்த வருடம் பெற்றார்.

இதையும் படிங்க: அஸ்வினின் ஆல் டைம் தனித்துவ சாதனையை சமன் செய்த ரவி பிஷ்னோய்.. வருங்கால ஸ்பின்னராக அசத்தல்

அதில் இதுவரை நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ள அவர் 21 டி20 போட்டிகளில் 34* விக்கெட்டுகளை 7.15 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து அசத்தி வருகிறார். அந்த வகையில் இந்திய அணியின் வருங்கால முதன்மை ஸ்பின்னராக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் அவர் அடுத்ததாக நடைபெறும் தென்னாப்பிரிக்க டி20 தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement