IND vs WI : அதுக்கு பேசாமல் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் – மாறிமாறி சொதப்பிய 2 இளம் வீரர்களை கலாய்க்கும் ரசிகர்கள்

Avesh-Khan
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த த்ரில் வெற்றிகளைப் பெற்ற இந்தியா 2 – 0* என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றி அசத்தியது. அந்த நிலைமையில் இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி ஜூலை 27-ஆம் தேதி குயின்ஸ் பார்க் மைதானத்தில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இந்தியாவுக்கு தொடக்க வீரர் ஷிகர் தவான் – சுப்மன் கில் ஆகியோர் 113 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தபோது 7 பவுண்டரியுடன் ஷிகர் தவான் 58 (74) ரன்களில் அவுட்டானார்.

Shubman Gill 98

- Advertisement -

அப்போது வந்த மழை ஒரு மணி நேரம் குறுக்கிட்டதால் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் துவங்கிய போட்டியில் 2-வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்ரேயாஸ் அய்யர் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 44 (34) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது வந்த சூர்யகுமார் யாதவ் மீண்டும் 8 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் மறுபுறம் அசத்தலாக பேட்டிங் செய்த சுப்மன் கில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 98* (98) ரன்கள் எடுத்த போது மீண்டும் வந்த மழை இந்தியாவின் முதல் இன்னிங்சை முடித்து வைத்தது. அதனால் 2 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை அவர் தவற விட்ட நிலையில் இந்தியா 36 ஓவர்களில் 225/3 ரன்கள் எடுத்தது.

இந்தியா வெற்றி:
அதை தொடர்ந்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 35 ஓவர்களில் 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீசுக்கு முகமது சிராஜ் வீசிய 2-வது ஓவரில் கெய்ல் மேயர்ஸ், சமர் ப்ரூக்ஸ் என முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 0/2 என தடுமாறிய அந்த அணிக்கு மற்றொரு தொடக்க வீரர் ஷாய் ஹோப் 22 (33) ரன்களில் ஆட்டமிழக்க மிடில் ஆர்டரில் பிரண்டன் கிங் 42 (37) கேப்டன் நிக்கோலஸ் பூரன் 42 (32) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியான ரன்களை எடுத்த போதிலும் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டானார்கள்.

Shikhar Dhawan Team India

அதன் பின் வந்த வீரர்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 26 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 137 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 119 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் வரலாற்றிலேயே முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்தது.

- Advertisement -

கிருஷ்ணா – ஆவேஷ்:
இந்த வெற்றிக்கு 98 ரன்கள் குவித்த சுப்மன் கில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார். முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றியை பெற்ற போதிலும் கடைசி கட்ட ஓவர்களில் அதிக ரன்களை கொடுத்தார் என்பதற்காக 2-வது போட்டியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அதிரடியாக நீக்கப்பட்டு ஆவேஷ் கான் அறிமுகமாக களமிறங்கினார்.Prasidh-1

Avesh Khan

ஆனால் அறிமுக போட்டியிலேயே அசத்தாமல் சுமாராகவும் பந்துவீசாத அவர் 6 ஓவரில் 54 ரன்களை வாரி வழங்கி மோசமாக செயல்பட்டார். அதனால் முதல் போட்டியில் 10 ஓவர்களில் 1 மெய்டன் உட்பட 62 ரன்களை கொடுத்த பிரிசிதி கிருஷ்ணாவே பரவாயில்லை என்று கருதிய இந்திய அணி நிர்வாகம் 3-வது போட்டியில் மீண்டும் ஆவேஷ் கானுக்கு பதில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தது.

அப்படி கை நழுவிச் சென்ற வாய்ப்பு மீண்டும் கிடைத்ததால் அதில் மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரசித் கிருஷ்ணா 3-வது போட்டியிலும் தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக கொஞ்சம் கூட முன்னேற்றமடைந்து பந்து வீசாமல் 1 விக்கெட் எடுத்தாலும் வெறும் 4 ஓவர்களில் 30 ரன்களை வழங்கி மீண்டும் சுமாராகவே பந்து வீசினார். சொல்லப்போனால் நேற்றைய போட்டியில் பந்துவீச்சில் அசத்திய எஞ்சிய இந்திய பவுலர்களை காட்டிலும் அவர் தான் அதிகபட்சமாக 7.50 என்ற சுமாரான எக்கனாமியில் பந்துவீசினார்.

- Advertisement -

arshdeep

பருத்தி மூட்டை:
இப்படி பொன்னாக கிடைத்த வாய்ப்பில் 2 இந்திய வீரர்களும் மாறி மாறி சொதப்பியதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் இதற்கு பேசாம பருத்தி மூட்டைகள் குடோனிலேயே இருக்கலாமே என்ற வகையில் சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள்.

இதையும் படிங்க:  IND vs WI : வெறும் 2 ரன்னில் சச்சினின் ஆல்-டைம் வரலாற்று சாதனையை தவறவிட்ட இளம் வீரர் – மழையால் நேர்ந்த பரிதாபம்

மேலும் இந்த வள்ளல் பரம்பரை பவுலர்களுக்கு பதில் துல்லியமாக பந்துவீசி வாய்ப்புக்காக பெஞ்சில் காத்திருக்கும் அர்ஷிதீப் சிங்கிற்கு இந்த வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் வாய்ப்பு கொடுத்திருக்கலாமே என்றும் தங்களது ஆதங்கத்தையும் கோரிக்கையையும் வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement