IND vs WI : வெறும் 2 ரன்னில் சச்சினின் ஆல்-டைம் வரலாற்று சாதனையை தவறவிட்ட இளம் வீரர் – மழையால் நேர்ந்த பரிதாபம்

SHubman Gill Sachin Tendulkar
- Advertisement -

குயின்ஸ் பார்க் மைதானத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற்று வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 3-வது போட்டி ஜூலை 27-ஆம் தேதியான நேற்று நடைபெற்றது. இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் ஏற்கனவே அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று கோப்பையை கைப்பற்றிய இந்தியா இந்த சம்பிரதாய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் – சுப்மன் கில் ஆகியோர் 113 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சூப்பரான தொடக்கம் கொடுத்தனர். அதில் 7 பவுண்டரியுடன் ஷிகர் தவான் 58 (74)ரன்களில் ஆட்டமிழந்த போது வந்த மழை ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது.

Shubman Gill 98

- Advertisement -

அதனால் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் துவங்கப்பட்ட போட்டியில் 2-வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்ரேயாஸ் அய்யர் – சுப்மன் கில் ஜோடி இந்தியாவை மேலும் வலுப்படுத்தியது. அதில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 44 (34) ரன்களில் ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழக்க அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் மீண்டும் 8 (6) ரன்களில் ஏமாற்றினார். இருப்பினும் மறுபுறம் 7 பவுண்டரி 2 சிக்சருடன் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்த சுப்மன் கில் 98* (98) ரன்கள் எடுத்து சதத்தை நெருங்கினார்.

கெடுத்த மழை:
அப்போது 36 ஓவரில் இந்தியா 225/3 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் வந்த மழை ஜோராக ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. அதனால் முதல் இன்னிங்ஸ் முடிவதற்கான நேரம் வந்ததால் இந்தியாவின் ஆட்டம் முடிந்ததாக அம்பயர்கள் அறிவித்த காரணத்தால் வெறும் 2 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட சுப்மன் கில் கைக்கு எட்டிய கனியை வாயில் ருசிக்க முடியாத பரிதாபத்தை சந்தித்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹெய்டன் வால்ஷ் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

Mohammed Siraj vs WI

அதை தொடர்ந்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 35 ஓவர்களில் வெற்றிக்கு 257 ரன்கள் என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு தனது முதல் ஓவரை வீசிய முகமது சிராஜ் கெய்ல் மேயர்ஸ், சமர் ப்ரூக்ஸ் என அடுத்தடுத்த பேட்ஸ்மேன்களை டக் அவுட் செய்து மிரட்டினார். அதனால் 0/2 என தடுமாறிய அந்த அணிக்கு கடந்த போட்டியில் சதமடித்த சாய் ஹோப் இம்முறை 22 (23) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக வந்த பிரண்டன் கிங் 42 (37) கேப்டன் நிக்கோலஸ் பூரன் 42 (32) என அதிரடியான ரன்களை எடுத்தாலும் பெரிய ரன்களை எடுக்காமல் ஆட்டமிழந்தார்கள்.

- Advertisement -

இந்தியா வெற்றி:
அதனால் மேலும் சரிந்த அந்த அணிக்கு அடுத்து வந்த வீரர்களும் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 26 ஓவர்களில் 137 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் முதல் 2 போட்டிகளில் போலல்லாமல் 119 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்த இந்தியா 3 – 0 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்றது. அதிலும் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் அசத்திய இந்தியா வரலாற்றில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வைட்வாஷ் வெற்றியை பதிவு சாதனை படைத்துள்ளது.

Shikhar Dhawan Team India

இந்த வெற்றிக்கு 98 ரன்கள் குவித்த சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதையும் இந்த தொடரில் மொத்தமாக களமிறங்கிய 3 போட்டிகளில் 2 அரை சதங்கள் உட்பட 205 ரன்களை குவித்ததால் தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். முன்னதாக இந்த தொடரில் ஷிகர் தவானுடன் இஷான் கிசான் அல்லது ருதுராஜ் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் ஆச்சர்யப்படும் வகையில் வாய்ப்பை பெற்ற இவர் 64, 43 என முதல் 2 போட்டிகளில் நல்ல ரன்களை எடுத்து முறையே 119, 48 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இருப்பினும் அந்த நல்ல தொடக்கத்தை சதம் போன்ற பெரிய ரன்களாக மாற்றாமல் 2 போட்டிகளிலும் அஜாக்கிரதையாக அவுட்டானது ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் அதிருப்தியடைய வைத்தது.

Shubman Gill 1

தவறிப்போன சாதனை:
அதனாலேயே அவரும் சற்று விரக்தியுடன் காணப்பட்ட நிலையில் இப்போட்டியில் பொறுப்புடன் பேட்டிங் செய்து சதத்தை நெருங்கியபோது மழையால் 2 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். அதனால் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் இளம் வயதில் சதத்தை அடித்த இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற சச்சினின் ஆல்-டைம் சாதனையையும் அவர் தவற விட்டார்.

இதக்குமுன் 23 வருடம் 291 நாட்களில் சச்சின் சதமடித்துள்ளார் என்ற நிலைமையில் தற்போது 22 வயது நிரம்பியுள்ள கில் வரும் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டால் அந்த சாதனையை முறியடிக்க இன்னும் வாய்ப்புள்ளது. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்த போது 90 ரன்களில் அவுட்டாகாமல் இருந்த முதல் இந்திய தொடக்க வீரர் என்ற பெயரையும் அவர் பெற்றார். அத்துடன் சச்சினுக்குப் பின் தனது முதல் 4 ஒருநாள் போட்டிகளில் 30க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த இந்திய தொடக்க வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

Advertisement