இவருக்காக அந்த வைரத்தை விட்டிங்களே! நட்சத்திர வீரரால் ஹைதராபாத்தை கலாய்க்கும் ரசிகர்கள் – என்ன நடந்தது?

Kane Williamson DC vs SRH
Advertisement

ஐபிஎல் 2022 தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்க அனைத்து அணிகளும் போராடி வரும் நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இதுவரை பங்கேற்ற 10போட்டிகளில் 5 வெற்றி 5 தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. தற்போதைய நிலையில் எஞ்சிய போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றால் மட்டுமே நாக் – அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் அந்த அணியின் பேட்டிங்கில் கேப்டன் கேன் வில்லியம்சன் தொடர்ந்து சொதப்பி வருவது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

DC vs SRH Kane Williamson

குறிப்பாக மே 5-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 50-வது லீக் போட்டியில் டெல்லியை சந்தித்த ஹைதராபாத் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைவதற்கு அவரின் மீது மெதுவான பேட்டிங் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அப்போட்டியில் டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 207/3 ரன்கள் விளாசியது.

- Advertisement -

ஹைதெராபாத் தோல்வி:
அந்த அணிக்கு மந்தீப் சிங் 0 (5) மிட்செல் மார்ஷ் 10 (7) கேப்டன் ரிஷப் பண்ட் 26 (16) ஆகிய முக்கிய வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் எடுக்காததால் தடுமாறிய டெல்லியை மறுபுறம் நங்கூரமாக நின்று பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடியாக 12 பவுண்டரி 3 சிக்சருடன் 92* (58) ரன்கள் அடித்து காப்பாற்றினார். அவருக்கு உறுதுணையாக கடைசி 10 ஓவர்களில் மிரட்டல் பேட்டிங்கை வெளிப்படுத்திய ரோவ்மன் போவெல் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 67* (35) ரன்கள் எடுத்து மிரட்டல் பினிஷிங் கொடுத்தார்.

David Warner Rovman Powell

அதை தொடர்ந்து 208 என்ற கடினமான இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு நல்ல தொடக்கம் அடித்தளமாக தேவைப்பட்ட நிலையில் அபிஷேக் சர்மா 7 (6) ரன்களில் அவுட்டாக அடுத்த ஒருசில ஓவர்களில் 11 பந்துகளை சந்தித்து வெறும் 4 ரன்கள் எடுத்து டெஸ்ட் இனிங்ஸில் விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சன் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் மிடில் வரிசையில் ராகுல் திரிபாதி 22 (18) ஐடன் மார்க்ரம் 42 (25) ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் தனி ஒருவனாக 2 பவுண்டரி 6 சிக்சருடன் 62 (34) ரன்களை பறக்கவிட்டு போராடிய நிக்கோலஸ் பூரனும் ஆட்டமிழந்ததால் 20 ஓவர்களில் 186/8 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

டி20 மறந்துட்டாரா:
இந்த வெற்றியால் 10 போட்டிகளில் 5-வது வெற்றியை பதிவு செய்த டெல்லி 5-வது இடத்தில் இருந்த ஹைதராபாத்தை பின்னுக்கு தள்ளி 5-வது இடத்தை பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. இந்த தோல்விக்கு பந்துவீச்சில் சொதப்பிய ஹைதராபாத்திற்கு சேசிங் செய்யும்போது கேப்டனாக அதுவும் தொடக்க வீரராக கேன் வில்லியம்சன் கணிசமான ரன்களை அதிரடியாக அடித்து நல்ல தொடக்கம் கொடுக்க வேண்டியிருந்தது.

Kane Williamson

ஆனால் 11 பந்துகளில் அதுவும் 1 பவுண்டரி அடித்து எஞ்சிய 10 பந்துகளில் 1 ரன் கூட எடுக்காமல் 36.36 என்ற டெஸ்ட் கிரிக்கெட் ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் பேட்டிங் செய்தது ரசிகர்களை கடுப்பாக வைத்தது. இத்தனைக்கும் இவரை நம்பி தான் 2015 – 2021 வரை தொடக்க வீரராக அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து மலைபோல ரன்களை குவித்து 2016இல் சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக் கொடுத்த டேவிட் வார்னரை ஹைதராபாத் அணி நிர்வாகம் கழற்றிவிட்டு இவரை புதிய கேப்டனாக நியமித்தது. ஆனால் அணியை வழி நடத்துவதில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலும் கேப்டனுக்கு தகுந்தார் போல் அவர் பேட்டிங் செய்வதில்லை.

- Advertisement -

மோசமான ஸ்ட்ரைக் ரேட்:
இந்த வருடம் நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் இது போலவே மெதுவாக பேட்டிங் செய்த அவர் இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் 199 ரன்களை 24.38 என்ற மோசமான சராசரியில் 99.40 என்ற அதைவிட மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 200 ஸ்ட்ரைக் ரேட் என்பதே சுமராக பார்க்கப்படும் நிலையில் 100க்கும் கீழான ஸ்ட்ரைக் ரேட்டில் வில்லியம்சன் போன்ற நட்சத்திர வீரர் விளையாடுவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. மேலும் இந்த வருட ஐபிஎல் தொடரில் குறைந்தது 100 பந்துகளை எதிர்கொண்ட பேட்ஸ்மேன்களில் வெங்கடேஷ் ஐயருக்கு (97.77) அடுத்து 100க்கும் கீழ் ஸ்ட்ரைக் ரேட் கொண்ட ஒரே பேட்ஸ்மேன் என்ற மோசமான பெருமையையும் வில்லியம்சன் பெற்றுள்ளார்.

- Advertisement -

மேலும் 9 வருடங்களுக்குப் பின் ஒரு ஐபிஎல் தொடரில் குறைந்தது 10 இன்னிங்சில் விளையாடிய ஒரு பேட்ஸ்மேன் 100க்கு கீழான ஸ்டிரைக் ரேட் கொண்டுள்ளது. இதுவே முதல் முறையாகும் அந்தப் பட்டியல் இதோ:
1. கிரேம் ஸ்மித் : 2009
2. நிதின் சைனி : 2012
3. ஜேக் காலிஸ் : 2013
4. கேன் வில்லியம்சன் : 2022*

இதையும் படிங்க : சோயப் அக்தர் உலகசாதனை உடைக்கும் அளவுக்கு புதிய சாதனை படைத்த உம்ரான் மாலிக் – ஆனாலும் ரசிகர்கள் கவலை

இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என பெயரெடுத்த வில்லியம்சன் டி20 கிரிக்கெட்டில் எப்படி விளையாட வேண்டும் என்பதை மறந்து விட்டாரா என்று ரசிகர்கள் அவர்மீது அலுத்துக் கொள்கிறார்கள்.

Advertisement