
டெல்லியை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 2008 அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சர்வதேச அரங்கில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட துவங்கினார். குறிப்பாக கேப்டன் தோனியின் ஆதரவுடன் ஜாம்பவான் சச்சின் விடைபெற்ற 2013க்குப்பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் அனைத்து இடங்களிலும் அனைத்து டாப் பவுலர்களையும் மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 25000க்கும் மேற்பட்ட ரன்களையும் 75 சதங்களையும் அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த வரும் அவர் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக போற்றப்படுகிறார்.
அதே போல கேப்டனாகவும் உலகக்கோப்பையை வென்று கொடுக்காவிட்டாலும் வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2016 – 2021 வரை இந்தியாவை நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்தார். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்த அவர் வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அது போக ஐபிஎல் தொடரில் 2008 முதல் பெங்களூரு அணிக்காக விளையாடும் ஒரே வீரராக தனித்துவ சாதனையும் படைத்துள்ள அவர் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்த வீரராக 15 வருடங்களை கடந்து தொடர்ந்து அசத்தி வருகிறார்.
இன்கம்டேக்ஸ் ரெய்ட்:
அந்த வகையில் நவீன கிரிக்கெட்டில் உலக அளவில் மிகப்பெரிய நட்சத்திர ஜாம்பவான் வீரராக செயல்பட்டு வருவதற்கு நிகரான பணத்தையும் சம்பாதித்துள்ள விராட் கோலியை சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் ஃபாலோ செய்கிறார்கள். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சச்சின், தோனி, ரோகித் சர்மா ஆகியோரை மிஞ்சியுள்ள அவர் உலக அளவில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயனல் மெஸ்ஸி ஆகியோரை தொடர்ந்து அதிக ரசிகர்களை ஃபாலோயர்களாக கொண்டுள்ள 3வது விளையாட்டு வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
அப்படி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சபட்சமாக இருக்கும் நட்சத்திரங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவுக்கும் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை சமீபத்தில் ஒரு நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. அதில் எதிர்பார்த்தது போலவே ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோரை தொடர்ந்து விராட் கோலி தன்னுடைய ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு 11.45 கோடி வருமானமாக பெறுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
ஏனெனில் இந்தியாவுக்காக வருடம் முழுவதும் விளையாடினால் கூட வெறும் 7 கோடி மட்டுமே கிடைக்கும் நிலையில் இங்கே பலருக்கு மாத சம்பளமாக 11500 ரூபாய் கிடைப்பதே கடினமாக இருக்கிறது. இருப்பினும் அவை அனைத்தையும் தம்முடைய 15 வருட கடின உழைப்பால் சாதித்துள்ள விராட் கோலிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து அதைப் பற்றி சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்தனர். இருப்பினும் அதைப் பார்த்த விராட் கோலி 11.50 கோடி சம்பாதிக்கிறேன் என்பதை நீங்கள் பார்த்தீர்களா? என்பது போல் தமது சமூக வலைதளப்பக்கங்களில் கிடைக்கும் வருமானம் பற்றி வெளிவந்த செய்திகள் உண்மையல்ல என்று ட்விட்டரில் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆனால் அதை பார்க்கும் சில ரசிகர்கள் ரெனால்டோ மற்றும் ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக ஃபாலோயர்களை கொண்டுள்ள நீங்கள் ஒரு பதிவுக்கு 11.50 கோடி வாங்கவில்லை என்று சொல்வதை தான் நம்ப முடியவில்லை என கலகலப்பை வெளிப்படுத்துகின்றனர். அதிலும் சில ரசிகர்கள் விராட் கோலி 11.50 கோடி பெறவில்லை என்று சொல்வது “சும்மா இருங்கையா இப்படி ட்ரெண்டிங் செய்து வருமான வரித்துறையினர் கண்களுக்கு சென்றால் பின்னர் நோட்டீஸ் விட்டு ரெய்டு வந்து விடுவார்கள்” என்ற வகையில் இருப்பதாக ட்விட்டரில் கலாய்க்கிறார்கள்.
இதையும் படிங்க:IND vs WI : சிறப்பாக செயல்பட்டு 77 ரன்கள் அடித்தும் சுப்மன் கில்லை 2 முன்னாள் வீரர்களுடன் சேர்ந்து கலாய்க்கும் ரசிகர்கள் – காரணம் இதோ
இருப்பினும் இந்தியாவிலேயே விராட் கோலி தான் அதிக சொத்து மதிப்பை கொண்ட விளையாட்டு வீரர் (1030 கோடி) என்ற மற்றொரு புள்ளி விவரமும் சமீபத்தில் வெளியானது. எனவே அதற்கு தகுந்த வருமான வரியை அவர் ஒவ்வொரு வருடமும் செலுத்தாமல் இருக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.