IND vs SL : அடுத்த ராகுலாக உருவாவதற்கு முன் கழற்றி விடுங்க, இளம் வீரரை சாடும் ரசிகர்கள் – 3 காரணம் இதோ

Shubman Gill KL rahul
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற கணத்தில் கோப்பையை வென்று 2023 புத்தாண்டை வெற்றியுடன் துவங்கியுள்ளது. குறிப்பாக முதலிரண்டு போட்டிகளுக்கு பின் சமநிலை பெற்ற இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்க ராஜ்கோட் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் சூரியகுமார் யாதவ் (112*) அதிரடியான சதத்தால் 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதையும் உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதை நிரூபித்தது.

இந்த வெற்றியால் 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி வெற்றியுடன் துவக்கியுள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் சுமாராக செயல்பட்டதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்கும் வேலை துவங்கியுள்ளது. அதில் தடவலாக செயல்பட்ட தொடக்க வீரர் கேஎல் ராகுலுக்கு பதிலாக இத்தொடரில் சுப்மன் கில் வாய்ப்பு பெற்றார். அந்த வாய்ப்பில் 7 (5), 5 (3) என முதலிரண்டு போட்டியில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அவர் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் 46 (36) ரன்களை 127.78 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே எடுத்தார்.

- Advertisement -

கழற்றி விடுங்க:
1. குறிப்பாக இஷான் கிசான் 1 ரன்னில் அவுட்டானதும் அதிரடியாக விளையாட வேண்டிய அவர் தனது இடத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தடவலாக பேட்டிங் செய்து பவர் பிளே ஓவர்களில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். நல்ல வேளையாக அடுத்து வந்த ராகுல் திரிபாதி தனது இடத்தைப் பற்றி கவலைப்படாமல் சுயநலமின்றி 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 35 (16) ரன்களை 218.75 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் தெறிக்க விட்டு 5.5 ஓவரில் இந்தியாவை 52/2 என்ற நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து அவுட்டானார்.

ஆனால் மறுபுறம் எதிர்கொண்ட பந்துக்கு தகுந்தார் போல் 100+ ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே சுப்மன் கில் தொடர்ந்து விளையாடியதை நேரலையில் பார்த்த ரசிகர்கள் நன்றாக தெரிந்திருப்பார்கள். அந்த சமயத்தில் வந்த சூரியகுமார் யாதவ் திரிபாதியை விட மிரட்டலாக பேட்டிங் செய்த போதும் 35 ரன்கள் வரை சுப்மன் கில் தொடர்ந்து 100 – 110 ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே விளையாடினார். அதனால் ஒரு கட்டத்தில் வர்ணனையாளர்களே கடுப்பான நிலையில் அதிரடியை துவக்கி 2 சிக்சர்களை அடித்ததால் அவுட்டாகும் போது 127.78 என்ற பார்ப்பதற்கு ஓரளவு நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

2. இங்கு ராகுல் திரிபாதி மற்றும் சூரியகுமாருடன் 2, 3வது விக்கெட்டுக்கு மொத்தமாக அமைத்த 160 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் அவர் வெறும் 46 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ஒருவேளை அவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடாமல் போயிருந்தால் இவருடைய ஆமைவேக ஆட்டம் நிச்சயமாக இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்திருக்கலாம். மொத்தத்தில் தன்னுடைய முதல் அரை சதத்தை அடித்து தனது இடத்தை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் சுப்மன் கில் பேட்டிங் செய்ததாக ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

- Advertisement -

3. அது போக ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக பெரிய ரன்களை குவிக்கும் திறமை கொண்டுள்ள இவருக்கு டி20 கிரிக்கெட்டில் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவிப்பது ஆரம்ப முதலே பிரச்சினையாக இருந்து வருகிறது. அதனாலேயே இந்தியாவுக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2019லேயே அறிமுகமாகி விட்ட அவர் டி20 கிரிக்கெட்டில் கடந்த நவம்பர் மாதம் தான் அறிமுகமானார்.

அதுவும் கடந்த வருடம் குஜராத் அணியில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்து முதல் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அடுத்தடுத்த தொடர் நாயகன் விருதுகள் வென்றதால் இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை என்னவெனில் ஐபிஎல் தொடரில் 71 இன்னிங்ஸ்சில் 1900 ரன்களை 125.25 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே எடுத்துள்ள அவர் 2022 சீசனில் 483 ரன்களை குவித்தாலும் 132.33 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே எடுத்தார்.

இதையும் படிங்கIND vs SL : டி20 ல மிஸ் ஆயிடுச்சி, ஆனா ஒன்டே மேட்ச்ல கண்டிப்பா நான் அதை செய்வேன் – தசுன் ஷனகா பேட்டி

எனவே 150க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினால் மட்டுமே வெற்றி பெறக்கூடிய டி20 கிரிக்கெட்டில் சுயநல எண்ணத்துடன் விளையாடும் சுப்மன் கில் 2024 உலகக்கோப்பையில் ராகுல் போல உருவாவதற்கு முன்பாக கழற்றி விடுமாறு ரசிகர்கள் கலாய்க்கிறார்கள்.

Advertisement