- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உ.கோ வரும் போகும் ஆனால் பும்ரா கிடைப்பாரா – ரோஹித் சர்மாவை கலாய்க்கும் ரசிகர்கள், அப்படி என்ன சொன்னாரு பாருங்க

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் கோலாகலமாக துவங்கிய ஐசிசி டி20 உலக கோப்பையை வெல்ல களமிறங்கும் 16 அணிகளுக்கு மத்தியில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்குகிறது. அவரது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனைக் இருதரப்பு தொடர்களிலும் தோல்வியடையாமல் சக்கை போடு போட்டு உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறிய இந்தியா 6 அணிகள் பங்கேற்று மினி உலகக் கோப்பையை போன்ற சமீபத்திய ஆசிய கோப்பையில் தோற்று பின்னடைவை சந்தித்தது. அதைவிட அனைத்து நேரங்களிலும் சிறப்பாக பந்து வீசி வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய கருப்பு குதிரையாக கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியுள்ளது ஆரம்பத்திலேயே சறுக்கலை கொடுத்துள்ளது.

ஏனெனில் அவரை தவிர்த்து இடம் பிடித்துள்ள புவனேஸ்வர் குமார் போன்றவர்கள் வேகத்துக்கு கொடுக்கக்கூடிய ஆஸ்திரேலியாவில் 130+ கி.மீ வேகத்தில் மட்டுமே பந்து வீசக்கூடியவர்கள் என்பதுடன் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதனால் இம்முறையும் இந்தியாவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்துள்ளதாக நிறைய ரசிகர்கள் கவலையை வெளிப்படுத்துகிறார்கள். முன்னதாக இப்படி ஒரு நிலைமை வந்து விடக்கூடாது என்பதற்காகவே கடந்த ஒரு வருடமாக இந்தியா பங்கேற்ற ஜிம்பாப்வே, அயர்லாந்து போன்ற முக்கியமற்ற தொடர்களில் பணிச்சுமையை நிர்வகிக்கும் வகையில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது.

- Advertisement -

ரோஹித்தின் ஆதரவு:
ஆனால் அதையும் தாண்டி அவர் காயத்தால் வெளியேறியதை பார்க்கும் பெரும்பாலான ரசிகர்கள் இவர் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுவார் இந்தியாவுக்காக என்றால் காயமடைவார் அல்லது ஓய்வெடுப்பார் என்று கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஏனெனில் 2019 முதல் ஐபிஎல் தொடரில் மும்பை பங்கேற்ற 60 போட்டிகளில் 59இல் விளையாடிய அவர் அதே காலகட்டத்தில் இந்தியா பங்கேற்ற 70 போட்டிகளில் 16இல் மட்டுமே விளையாடினார். இருப்பினும் யாராவது நாட்டுக்காக விளையாடாமல் வேண்டுமென்றே காயமடைவார்களா என்று ஆதரவும் அவருக்கு காணப்படுகிறது.

இந்நிலையில் உலகக் கோப்பையை விட பும்ரா போன்ற வீரர் முக்கியமானவர் என்று தெரிவிக்கும் ரோகித் சர்மா இப்போது அவருக்கு ஆதரவு கொடுத்தால் வரும் காலங்களில் நிறைய உலக கோப்பைகளில் விளையாடி வென்று கொடுப்பார் என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பும்ரா தரமான வீரர், கடந்த பல வருடங்களாக அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்டுள்ள காயத்திற்கு நீங்கள் எதுவும் செய்ய முடியாது. இந்த உலகக் கோப்பையில் அவர் விளையாடுவது பற்றி மருத்துவர்களிடம் நாங்கள் எவ்வளவோ பேசியும் அதற்கான நேர்மறையான முடிவுகள் கிடைக்கவில்லை”

- Advertisement -

“உலகக்கோப்பை என்பது முக்கியம் என்றாலும் அவரது கேரியர் அதை விட எங்களுக்கு முக்கியம். ஏனெனில் 27 – 28 வயதாகும் அவரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் எஞ்சியுள்ளது. எனவே அவரது விஷயத்தில் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்கள் அனைவரும் ஓய்வெடுக்கச் சொன்னதால் நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அவரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது. வருங்காலங்களில் அவர் இன்னும் நிறைய போட்டிகளில் விளையாடி நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. அதே சமயம் தற்சமயத்தில் அவர் விலகியுள்ளது எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்” என்று கூறினார்.

இப்படி உலகக் கோப்பையை விட முக்கியம் என்று பும்ரா முக்கியம் என்று கூறும் ரோகித் சர்மாவின் கருத்தை பார்க்கும் ரசிகர்கள் ஆமாம் ஆமாம் அவரது விஷயத்தில் நீங்கள் ரிஸ்க் எடுக்கத்தான் கூடாது என்று கலாய்க்கிறார்கள். ஏனெனில் அவரது காயம் குணமடைய 6 மாதங்கள் தேவைப்படும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் அதிலிருந்து குணமடைந்து சரியாக 6 மாதங்கள் கழித்து 2023 ஐபிஎல் தொடரில் உங்களது மும்பை அணிக்காக விளையாடுவார் என்று ரசிகர்கள் அதிருப்தியை தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் உலகக்கோப்பையை விட பும்ராவின் கேரியர் முக்கியமானது என்று நீங்கள் சொல்வது சரிதான் என ரோகித் சர்மாவை நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்பதை பார்க்க முடிகிறது. ஏனெனில் சரியாக 6 மாதங்கள் கழித்து ஐபிஎல் தொடரில் விளையாட போகும் பும்ரா அதன்பின் இந்தியா பங்கேற்கும் பெரும்பாலான இருதரப்பு தொடர்களில் ஓய்வெடுத்து ராஜாவைப் போல் உலக கோப்பையில் விளையாட வருவார் என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -
Published by