இப்படி ஒரு தங்கத்தை எதிரணியிடம் விட்டுட்டீங்களே ! பெங்களூருவை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

Chahal
- Advertisement -

மும்பை நகரில் மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் மார்ச் 5-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 13-ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. உலகப் புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் மிகவும் த்ரில்லாக நடைபெற்ற அந்தப் போட்டியில் ராஜஸ்தானை தோற்கடித்த பெங்களூரு 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இந்த வருடம் பங்கேற்ற 3 போட்டிகளில் 2-வது வெற்றியை பதிவு செய்த டு பிளேஸிஸ் தலைமையிலான பெங்களூரு வெற்றி நடை போட துவங்கியுள்ளது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 169/3 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கிய நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நங்கூரமாக நின்று பெங்களூர் பவுலர்களை பந்தாடி 47 பந்துகளில் 6 சிக்சர்கள் உட்பட 70* ரன்கள் விளாசினார்.

- Advertisement -

ராஜஸ்தான் தோல்வி:
அவருடன் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் சிம்ரோன் ஹெட்மையர் 31 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 42 ரன்கள் விளாசி நல்ல பினிஷிங் கொடுத்தார். அதை தொடர்ந்து 170 என்ற இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு தொடக்க வீரர்களான கேப்டன் டு பிளேஸிஸ் மற்றும் அனுஜ் ராவத் ஆகியோர் 51 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அதிலும் டு பிளேஸிஸ் 20 பந்துகளில் 5 பவுண்டரி உட்பட 29 ரன்களும் அனுஜ் ராவத் 25 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதைப் பயன்படுத்திய ராஜஸ்தான் அடுத்து வந்த நட்சத்திரம் விராட் கோலியை 5 ரன்களில் ரன் அவுட் செய்ய அவருடன் களமிறங்கிய டேவிட் வில்லியை டக் அவுட் செய்து அடுத்ததாக களமிறங்கிய ரூதர்போர்ட்டை 5 ரன்களில் அவுட் செய்து போட்டியை தனது பக்கம் திருப்பியது.

அசத்திய சஹால்:
இதனால் 87/5 என திண்டாடிய பெங்களூருவை இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய இளம் வீரர் சபாஷ் அகமது 26 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 45 ரன்கள் விளாசி காப்பாற்றினார். அவருக்கு துணையாக நின்ற தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 44* ரன்கள் எடுத்து அற்புதமாக பினிஷிங் கொடுத்ததால் 19.1 ஓவர்களில் 173/6 ரன்களை எடுத்த பெங்களூரு திரில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த தோல்வியால் இந்த வருட ஐபிஎல் தொடரில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று வெற்றி நடை போட்டு வந்த ராஜஸ்தான் முதல் முறையாக பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

முன்னதாக இந்த போட்டியில் ராஜஸ்தான் தோற்றாலும் அந்த அணிக்காக விளையாடிய நட்சத்திர வீரர் யூஸ்வென்ற சஹால் அற்புதமாக பந்துவீசினார் என்றே கூற வேண்டும். ஏனெனில் 51 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் எடுத்து பெங்களூரு மிரட்டி கொண்டிருந்தபோது அபாரமாக பந்துவீசிய அவர் கேப்டன் டு பிளேஸிசை 29 ரன்களுக்கு அவுட் செய்து ராஜஸ்தானுக்கு முக்கியமான முதல் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். அதன்பின் நடுவரிசையில் களமிறங்கிய டேவிட் வில்லியை 2-வது பந்திலேயே சில்வர் டக் அவுட் செய்து போட்டியை ராஜஸ்தான் பக்கம் திருப்பினார்.

தங்கத்தை விட்டுட்டீங்களே:
மொத்தத்தில் இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய அவர் வெறும் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளுடன் 3.75 என்ற துல்லியமான எக்கனாமியில் பந்து வீசி ராஜஸ்தானின் வெற்றிக்கு போராடினார். அவரை பார்த்த பல ரசிகர்கள் இப்படி ஒரு தங்கத்தை விட்டு விட்டார்களே என்று பெங்களூரு அணியை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். ஏனெனில் கடந்த 2013 முதல் 2021 வரை பெங்களூர் அணிக்காக விளையாடிய சஹால் தனது அபாரமான பந்து வீச்சால் நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

அதிலும் தொட்டாலே சிக்ஸர்கள் பறக்கக் கூடிய சிறிய மைதானமான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பொல்லார்ட், ரசல் போன்ற காட்டடி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அற்புதமாக பந்துவீசிய அவர் பெங்களூர் அணியின் முக்கிய முதுகெலும்பு பந்து வீச்சாளராக வலம் வந்தார். அதன் காரணமாகவே இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் இன்று ஒரு நல்ல பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார். பெங்களூரு அணிக்காக மொத்தம் 114 போட்டிகளில் 139 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் விராட் கோலியை போல பெங்களூர் அணியில் ஒரு முக்கிய வீரராக வலம் வந்தார்.

அதனால் பெங்களூர் அணிக்கு விளையாட அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த நிலையில் அவரை அந்த அணி நிர்வாகம் வலுக்கட்டாயமாக கழற்றி விட்டது. அப்படிப்பட்ட நிலையில் காலம் காலமாக விளையாடி வந்த பெங்களூர் அணிக்கு எதிராக முதல் முறையாக சஹால் பந்துவீசியதால் முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் உட்பட பலரும் சமூக வலைதளங்களில் பெங்களூரு அணியை கலாய்த்தனர்.

இதையும் படிங்க : தோனியிடம் பாத்த அந்த விஷயத்தை அப்படியே தினேஷ் கார்த்திக்கிடம் பார்க்கிறேன் – டூபிளெஸ்ஸிஸ் ஓபன்டாக்

அதற்கேற்றார்போல் நேற்றைய போட்டியில் அசத்திய அவர் 2 விக்கெட்டுகளை எடுத்தது மட்டுமல்லாமல் தனது முன்னாள் கேப்டன் விராட் கோலியை ரன் அவுட் செய்தார். இத்துடன் இதுவரை ராஜஸ்தானுக்காக பங்கேற்ற 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 2-வது பவுலராக அசத்தி வருகிறார்.

Advertisement