தோனியிடம் பாத்த அந்த விஷயத்தை அப்படியே தினேஷ் கார்த்திக்கிடம் பார்க்கிறேன் – டூபிளெஸ்ஸிஸ் ஓபன்டாக்

Karthik-2
- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 169 ரன்களை குவித்தது. பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூர் அணியானது துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குறிப்பாக 12.3 ஓவர்களில் 87 ரன்கள் எடுத்திருந்தபோது 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

shahbaz

- Advertisement -

அந்த நேரத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் இளம்வீரரான சபாஷ் அகமதுடன் சேர்ந்து சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர்களது சிறப்பான ஆட்டம் காரணமாக கைநழுவிப் போன ஆட்டம் மீண்டும் அவர்களது கைக்கு சென்றது என்றே கூறலாம். ஏனெனில் 26 பந்துகளைச் சந்தித்த சபாஷ் அகமது 4 பவுண்டரி 3 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதேநேரத்தில் இறுதிவரை களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்சர் என 44 ரன்கள் குவித்து பெங்களூரு அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். தினேஷ் கார்த்திக்கின் இந்த சிறப்பான ஆட்டம் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் அவரது இந்த ஆட்டம் குறித்து தற்போது பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் தினேஷ் கார்த்திக்கை சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் தோனியுடன் ஒப்பிட்டு பெரிய அளவில் பாராட்டியுள்ளார்.

karthik

இதுகுறித்து அவர் கூறுகையில் : கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பினிஷராக இருக்கும் தோனிக்கும் தினேஷ் கார்த்திக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை நான் பார்க்கிறேன். இந்த ஆண்டு நான் பார்த்ததில் இருந்து இருவரும் ஒரே மாதிரியான பினிஷிங் திறமைகளை பெற்றுள்ளனர். தோனியிடம் இருந்த பினிஷிங் திறனை நான் அப்படியே தினேஷ் கார்த்திக் இடம் பார்க்கிறேன். நீண்ட காலமாக நான் தினேஷ் கார்த்திக்கை எதிர்த்து விளையாடி உள்ளேன்.

- Advertisement -

அப்போதும் அவர் ஆபத்தான வீரராக இருந்தார். இப்போதும் அவர் ஆபத்தான வீரராக இருக்கிறார். ஆட்டத்தின் சூழ்நிலை மற்றும் அழுத்தத்திற்கு மத்தியில் அவர் மிகவும் அமைதியாக சிறப்பாக செயல்படுகிறார். அடுத்தடுத்து என்ன செய்வது என்று அவருக்கு நன்றாக தெரியும். எனவே அவர் கட்டுப்பாட்டுடன் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : மாஸ் பினிஷிங் செய்த நம்ம தினேஷ் கார்த்திக்! ராஜஸ்தானை சாய்த்து பெங்களூரு திரில் வெற்றி – நடந்தது என்ன?

தோனி கூல் என்றால், தினேஷ் கார்த்திக் ஐஸ் கூல் என டு பிளிசிஸ் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனி மிகச்சிறந்த பினிஷர் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் தற்போதும் தொடர்ந்து விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் இன்றளவும் தான் சிறந்த பினிஷர் என்பதை அவ்வப்போது தொடர்ந்து வெளிக்காட்டி கொண்டிருக்கிறார். மேலும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்றும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

Advertisement