மாஸ் பினிஷிங் செய்த நம்ம தினேஷ் கார்த்திக்! ராஜஸ்தானை சாய்த்து பெங்களூரு திரில் வெற்றி – நடந்தது என்ன?

RR vs RCB DK
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் மார்ச் 5-ஆம் தேதியான நேற்று நடந்த 13-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த அப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு இளம் தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வல் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இருப்பினும் அடுத்து களமிறங்கிய இளம் வீரர் டேவூட் படிக்கள் மற்றொரு நட்சத்திர தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் உடன் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

RR vs RCB Hetmayar Buttler

- Advertisement -

2-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் குவித்து சரிந்த ராஜஸ்தானை தூக்கிய இந்த ஜோடியில் 29 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 37 ரன்கள் எடுத்திருந்தபோது படிக்கள் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 1 சிக்சர் உட்பட 8 ரன்கள் எடுத்து ஏமாற்றமளித்தால் 86/3 என மீண்டும் ராஜஸ்தான் தடுமாறியது.

ராஜஸ்தான் 169 ரன்கள் சேர்ப்பு:
இருப்பினும் அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் சிம்ரோன் ஹெட்மையர் அதிரடியாக பேட்டிங் செய்ய அவருடன் மறுபுறம் தொடர்ந்து ஆரம்பம் முதல் நங்கூரமாக நின்ற ஜோஸ் பட்லர் இணைந்து கடைசி நேரத்தில் அதிரடியாக ரன்களை குவித்தார். 11-வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதுவரை ஓரளவு நன்றாக பந்து வீசிக்கொண்டிருந்த பெங்களூர் பவுலர்களை சரமாரியாக அடித்து அதிரடியாக ரன்களை குவித்தனர்.

RR vs RCB Buttler

தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த இந்த ஜோடியில் அரை சதம் அடித்த ஜோஸ் பட்லர் 42 பந்துகளில் 6 சிக்சர்கள் உட்பட 70* ரன்களும் சிம்ரோன் ஹெட்மயர் 31 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 42* ரன்களும் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழந்த ராஜஸ்தான் 169 ரன்கள் எடுத்தது. பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக ஹஸரங்கா, ஹர்சல் படேல், டேவிட் வில்லி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

- Advertisement -

தடுமாறிய பெங்களூரு:
அதை தொடர்ந்து 170 என்ற நல்ல இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் டு பிளேஸிஸ் மற்றும் அனுஜ் ராவத் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் குவித்த நல்ல தொடக்கம் கொடுத்தனர். அப்போது சுதாரித்த ராஜஸ்தான் அபாரமாக பந்துவீசி 20 பந்துகளில் 5 பவுண்டரி உட்பட 29 ரன்கள் எடுத்து அதிரடியாக பேட்டிங் செய்து கொண்டிருந்த டு பிளேஸிசை அவுட் செய்து அடுத்த ஓவரிலேயே 25 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த அனுஜ் ராவத்தை அவுட் செய்தது.

Dinesh Karthik Rawat

அத்துடன் அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திர வீரர் விராட் கோலி 5 ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றமளிக்க அவருடன் களமிறங்கிய டேவிட் வில்லி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அத்துடன் அடுத்து வந்த ரூதர்போர்ட் 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க அபார தொடக்கத்தை பெற்ற பெங்களூரு மிடில் ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 87/5 என தடுமாறி திடீரென தோல்வியின் பிடியில் சிக்கியது.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் மாஸ் பினிஷிங்:
அந்த இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய சபாஷ் அகமது தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் தினேஷ் கார்த்திக் உடன் இணைந்து அதிரடியாக ரன்களை குவிக்க முயன்றார். கடைசி நேரத்தில் அதிரடியாக பேட்டிங் செய்த இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் குவித்து ராஜஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்த போது 26 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 45 எடுத்திருந்த சபாஷ் அகமது முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அதனால் திடீரென மீண்டும் பெங்களூருவுக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில் அவருடன் மறுபுறம் விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் கடைசி நேர பரபரப்பான தருணத்தில் தயங்காமல் அதிரடியாக பேட்டிங் செய்து 7 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்பட 44* ரன்களை 191.30 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் விளாசி அபாரமான மாஸ் பினிசிங் கொடுத்தார்.

Dinesh Karthik 2

அவரின் அதிரடியான ஆட்டத்தில் பெங்களூருவின் வெற்றி உறுதியான நிலையில் கடைசி ஓவரின் முதல் பந்தில் ஹர்ஷல் படேல் (9* ரன்கள்) சிக்ஸர் பறக்க விட்டு பெங்களூருவை வெற்றி பெற செய்தார். ராஜஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் மற்றும் சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். இதனால் 19.1 ஓவரில் 173/6 ரன்கள் எடுத்த பெங்களூரு 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு அஷ்வின் தான் காரணமா?, எழும் குற்றசாட்டு – என்ன நடந்தது?

இதனால் இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2-வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு வெற்றி நடைபோடுகிறது. இந்த அற்புதமான வெற்றிக்கு அபாரமான பினிஷிங் செய்து முக்கிய பங்காற்றிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Advertisement