IPL 2023 : அர்ஜுனுக்கு சப்போர்ட்? வாங்கிய காசுக்கு கடைமை தவறாமல் வேலை செய்த அம்பயரை கலாய்க்கும் சிகர்கள் – நடந்தது என்ன

Nitin Menon Umpire
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. கடந்த வருடம் புள்ளி பட்டியலில் வரலாற்றில் முதல் முறையாக கடைசி இடத்தைப் பிடித்து அவமானத்திற்குள்ளான அந்த அணி இம்முறை கம்பேக் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் களமிறங்கியுள்ளது. அதில் வழக்கம் போல முதலிரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தாலும் அடுத்த 3 போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்து மும்பை வெற்றி நடை போட்டு வருகிறது.

குறிப்பாக ஏப்ரல் 18ஆம் தேதி ஹைதராபாத்துக்கு எதிராக நடைபெற்ற தன்னுடைய 5வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை கேமரூன் கிரீன் 64* (40) இஷான் கிசான் 38 (31) திலக் வர்மா 37 (17) என முக்கிய வீரர்களின் அதிரடியான ரன் குபிப்பால் 192/5 ரன்கள் சேர்த்தது. அதை துரத்திய ஹைதராபாத் ஆரம்பம் முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 19.5 ஓவரில் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மும்பைக்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட போது புவனேஸ்வர் குமாரை அவுட்டாக்கி தன்னுடைய முதல் விக்கெட்டை பதிவு செய்து அனைவரது பாராட்டுகளை பெற்றார்.

- Advertisement -

கலாய்க்கும் ரசிகர்கள்:
முன்னதாக அந்தப் போட்டியில் 196 ரன்களை துரத்திய ஹைதராபாத்துக்கு எதிராக அர்ஜுன் டெண்டுல்கர் 3வது ஓவரை ராகுல் திரிபாதி எதிர்கொண்ட நிலையில் 4வது பந்தை லெக் சைட் திசையில் சென்றது. ராகுல் திரிபாதியின் பேட்டில் படாத அந்த பந்து நேராக விக்கெட் கீப்பர் இசான் கிசான் கைகளில் தஞ்சமடைந்தது.

அப்போது கேப்டன் ரோகித் சர்மா அமைதியாக இருந்த நிலையில் பந்து வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் விக்கெட் கீப்பர் இசான் கிசான் ஆகியோர் அந்த பந்து ராகுல் திரிபாதி பேட்டில் பட்டிருக்கலாம் என்று நடுவர் நித்தின் மேனனிம் அவுட் கேட்டனர். பொதுவாக அது போன்ற தருணங்களில் ஒய்ட் வழங்கக்கூடாது என்பதற்காக அம்பையரை குழப்புவதற்காக வேண்டுமென்றே பவுலர் மற்றும் விக்கெட் கீப்பர் அவ்வாறு அவுட் கேட்பது வழக்கமாகும்.

- Advertisement -

இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் லெக் சைட் திசையில் செல்லும் அனைத்து பந்துகளும் ஒயிட் என்ற விதிமுறைகிணங்க நடுவர் நித்தின் மேனனும் எதிர்பார்த்தது போலவே ஒயிட் வழங்கினார். ஆனால் அப்போது அது அவுட்டாக இருக்கலாம் என்று மீண்டும் அர்ஜுன் டெண்டுல்கர் கேட்டார். அதனால் எதுவுமே யோசிக்காத நடுவர் நித்தின் மேனன் உடனடியாக தன்னுடைய பவரை பயன்படுத்தி சொந்த முயற்சியில் ரிவ்யூ எடுத்தது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது.

ஏனெனில் பொதுவாக ஏதேனும் ஒரு அணியை சேர்ந்தவர்கள் தான் நடுவர் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து ரிவியூ எடுப்பார்கள். ஆனால் இங்கே இரு அணிகளைச் சேர்ந்த யாருமே ரிவ்யூ எடுக்காத போது அர்ஜுன் டெண்டுல்கர் சந்தேகத்துடன் கேட்டார் என்பதற்காக அம்பயர் நிதின் மேனன் தாமாக முன்னே சென்று தம்முடைய பவரை பயன்படுத்தி அது அவுட்டா இல்லையா என்று 3வது நடுவரிடம் சோதிக்குமாறு கேட்டார். அதை சோதிக்கப்பட்ட போது எதிர்பார்த்தது போலவே ராகுல் திரிபாதி பேட்டில் நூலளவு கூட படாமல் பந்து சென்றது தெரிய வந்தது.

- Advertisement -

அதனால் மீண்டும் அந்த பந்தை நிதின் மேனன் ஒய்ட் வழங்கினார். அதை பார்த்த ரசிகர்கள் யாருமே ரிவ்யூ எடுக்காத போது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யும் அளவுக்கு நடந்து கொண்ட நிதின் மேனனை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். பொதுவாகவே மும்பை அணிக்கு காலம் காலமாக நடுவர்கள் 12வது வீரராக செயல்பட்டு வருவதாக எதிரணி ரசிகர்கள் பலமுறை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்கள்.

இதையும் படிங்க: MI vs SRH : தனது மகன் எடுத்த முதல் ஐ.பி.எல் விக்கெட் குறித்து சச்சின் வெளியிட்ட பதிவு – விவரம் இதோ

அந்த வகையில் இந்த போட்டியில் வாங்கிய காசுக்காக அர்ஜுன் டெண்டுல்கர் லேசாக கேட்டார் என்பதற்காக அவருக்கு எப்படியாவது முதல் விக்கெட்டை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மும்பை ரிவியூ எடுக்காமலேயே நிதின் மேனன் கடமை தவறாமல் நடந்து கொண்டதாக மீண்டும் வெளிப்படையாகவே ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement