கடைசியில் அந்த அதிர்ஷ்ட தேவதையால் கூட ஆர்சிபி கப் வாங்கி கொடுக்க முடில – இந்திய வீரரை கலாய்க்கும் ரசிகர்கள்

karnsharma
Advertisement

ஐபிஎல் 2022 தொடர் கடந்த 2 மாதங்களாக பல திருப்பங்கள் நிறைந்த போட்டிகளுடன் தினந்தோறும் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றுள்ளது. இந்த முறை 2 புதிய அணிகள் களமிறங்கியதால் கோப்பையை வெல்ல முன்பை விட கடும் போட்டி நிலவிய நிலையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அதைத்தொடர்ந்து மே 29-இல் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

 

RCB Faf Virat

- Advertisement -

இந்த தொடரில் முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அதற்கேற்றார்போல் செயல்படாமல் வரலாற்றில் 15-ஆவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. இத்தனைக்கும் விராட் கோலி கேப்டனாக இருக்கும் வரை கோப்பையை வெல்ல முடியாது என்ற விமர்சனத்திற்கு உள்ளான அந்த அணிக்கு இந்த முறை தென் ஆப்பிரிக்காவை வழிநடத்திய கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த டுப்லஸ்ஸிஸ் கேப்டனாக செயல்பட்டார்.

பெங்களூரு பரிதாபங்கள்:
அவரது தலைமையில் புதிய ஜெர்ஸியுடன் புத்துணர்ச்சியுடன் களமிறங்கிய அந்த அணி முதல் 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று அசத்தியது. ஆனால் அடுத்த 7 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்த அந்த அணி 4-வது இடத்திலிருந்த டெல்லியை கடைசியிடம் பிடித்த மும்பை தோற்கடித்த மாபெரும் உதவியாலும் அதிர்ஷ்டத்தாலும் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த நிலைமையில் 2020, 2021 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தோல்வியடைந்த எலிமினேட்டர் போட்டியில் இந்த முறை இளம் வீரர் ரஜத் படிதார் அதிரடியாக 112* ரன்கள் எடுத்ததால் லக்னோவை தோற்கடித்து அந்த கண்டத்தையும் தாண்டியது.

RCB Faf Du Plessis

- Advertisement -

ஆனால் ராஜஸ்தானுக்கு எதிரான குவாலிபயர் 2 போட்டியில் மீண்டும் ரஜத் படிதார் 58 ரன்களுடன் அதிரடி காட்டியதால் 13 ஓவர்களில் 107/2 என நல்ல நிலைமையில் இருந்த அந்த அணி அடுத்த 7 ஓவர்களில் 50/6 ரன்களை மட்டுமே எடுத்து மீண்டும் வழக்கம்போல முக்கிய நேரத்தில் சொதப்பி தோல்வியடைந்து பரிதாபமாக வெளியேறியது. அதுவும் இன்று வந்த குஜராத் கூட தனது முதல் வருடத்திலேயே கோப்பையை வென்றுள்ள நிலையில் 15 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாமல் திணறும் அந்த அணியை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வகைவகையாக கலாய்த்து வருகின்றனர்.

அதிர்ஷ்ட தேவதை:
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் கர்ண் சர்மா 2013 – 2016 வரையிலான காலகட்டங்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடினார். அதில் 2016இல் ஹைதராபாத் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் அடுத்த வருடமே நடந்த இடத்தில் அவரை மும்பை இந்தியன்ஸ் வாங்கியது. ஆச்சர்யமாக முதல் முறையாக மும்பை அணிக்காக அவர் விளையாடிய 2017 சீசனில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை 3-வது முறையாக அதுவும் 1 ரன் வித்தியாசத்தில் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

- Advertisement -

- Advertisement -

அதனால் அதற்கடுத்த வருடம் நடந்த ஏலத்தில் அவரை 5 கோடிக்கு தட்டி தூக்கிய சென்னை தடையிலருந்து மீண்டு வந்த 2018 சீசனில் அபாரமாக செயல்பட்டு 3-வது கோப்பையை வென்றது. அப்படி செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பது போல் கர்ண் சர்மா இடம் வகித்த அத்தனை அணிகளும் கோப்பையை வென்றதால் கடந்த சில வருடங்களாகவே அவரை ஐபிஎல் தொடரின் அதிர்ஷ்ட தேவதை என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

அவராலும் முடியல:
ஏனெனில் இதுவரை அவர் பங்கேற்ற 68 போட்டிகளில் 59 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளதால் பெரும்பாலும் அவர் பெஞ்சில் அமர்ந்திருந்தாலும் அவர் இடம் பிடித்திருந்த அணிகள் சாம்பியன் பட்டங்களை வென்றன. அதன் காரணமாகவே அவர் சுமாராக செயல்பட்டாலும் கூட எப்படியாவது எவ்வளவு தொகை செலவானாலும் அவரை வாங்கிவிட வேண்டுமென்று பெரும்பாலான அணிகள்  ஏலத்தின் போது போட்டி போட்டன. அந்த வகையில் இந்த வருடம் வெறும் 50 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு அந்த அதிர்ஷ்ட தேவதையை பெங்களூரு அணி தன் வசமாக்கியது.

அதனால் புதிய கேப்டன் டுப்லஸ்ஸிஸ் தலைமையில் இந்த வருடம் நிச்சயம் கோப்பை நமக்கு உறுதி என்று ஆர்சிபி ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் அவர் இருந்த போதிலும் அந்த அணி இறுதியில் தோல்வியடைந்த காரணத்தால் கடைசியில் அந்த அதிர்ஷ்ட தேவதையால் கூட “ஆர்சிபிக்கு கப் வாங்கி கொடுக்க முடியல” என்று ரசிகர்கள் கலக்கின்றனர். அத்துடன் இனிமேலும் இவர் அதிர்ஷ்ட தேவதை இல்லை என்று கரண் சர்மாவை கலாய்க்கும் ரசிகர்கள் இனிமேலாவது சிறப்பாக பந்துவீசி திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே ஐபிஎல் தொடரில் நீடித்திருக்க முடியும் என்பதை புரிந்து கொண்டு முன்னேற வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

Advertisement