IPL 2023 : தோனி போல் செயல்பட முயற்சித்து பல்ப் வாங்கிய பாண்டியா, அப்பட்டமான கேப்டன்ஷிப் தவறை கலாய்க்கும் ரசிகர்கள்

Hardik Pandya GT
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 16ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற 23வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய குஜராத் 20 ஓவரில் 177/7 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 45 (34) ரன்களும் டேவிட் மில்லர் 46 (30) ரன்களும் எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சந்திப் சர்மா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 178 ரன்கள் சேசிங் செய்த ராஜஸ்தானுக்கு யசஸ்வி ஜெய்ஸ்வால் 1 (7) – ஜோஸ் பட்லர் 0 (5) என அதிரடியான ஓப்பனிங் ஜோடி பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் தேவதூத் படிக்கல் 26 (25) ரியான் பராக் 5 (7) என அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். அதனால் 55/4 என சரிந்த ராஜஸ்தானை தூக்கி நிறுத்த போராடிய கேப்டன் சஞ்சு சாம்சன் மாயாஜால ஸ்பின்னரான ரஷித் கான் போரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை தெறிக்க விட்டு 3 பவுண்டரி 6 சிக்ஸருடன் 60 (32) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சொதப்பல் கேப்டன்ஷிப்:
அதை வீணடிக்காத வகையில் அடுத்து வந்த துருவே ஜுரேல் 18 (10) ரன்களும் அஸ்வின் 10 (3) ரன்களும் விளாசிய நிலையில் கடைசியில் சிம்ரோன் ஹெட்மயர் 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 56* (26) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் செய்து வெற்றி பெற வைத்தார். மறுபுறம் ஷமி 3 விக்கெட்களும் ரசித் கான் 2 விக்கெட்களை எடுத்து பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா 20 ரன்கள் எடுக்க தவறிய குஜராத் பந்து வீச்சில் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கி தோல்வியை சந்தித்தது.

அதை விட ரிங்கு சிங்கிடம் 5 சிக்ஸர்களை வழங்கிய யாஷ் தயாளுக்கு பதிலாக பஞ்சாப்புக்கு எதிரான கடந்த போட்டியில் வாய்ப்பு பெற்ற மூத்த வீரர் மோகித் சர்மா 2 வருடங்கள் கழித்து விளையாடிய முதல் போட்டியிலேயே 4 ஓவர்களில் வெறும் 18 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அப்படிப்பட்ட அவர் இந்த போட்டியில் அதையும் மிஞ்சி 2 ஓவரில் வெறும் 7 ரன்னை 3.50 என்ற டெஸ்ட் போட்டியை போன்ற எக்கனாமியில் கொடுத்து மிகச் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருந்தார்.

- Advertisement -

ஆனாலும் அவருக்கு முழுமையான 4 ஓவர்களை கொடுக்காத கேப்டன் ஹர்திக் பாண்டியா டெத் ஓவர்களில் எஞ்சிய 2 ஓவர்கள் வீசுவதற்கு வாய்ப்பிருந்தும் ஒன்றை கூட கொடுக்கவில்லை. ஆனால் இப்போட்டியில் அறிமுகமான இளம் ஸ்பின்னரான நூர் அஹமதுக்கு 17வது ஓவரை வீசுவதற்கு ஹர்திக் பாண்டியா கொடுத்தார். அதில் அவர் 8 ரன்களை கொடுத்த நிலையில் கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது மோஹித் சர்மாவை அழைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா மீண்டும் 2 ஓவரில் 19 ரன்களை வாரி வழங்கியிருந்த அனுபவமில்லாத நூர் அஹமதுக்கு கடைசி ஓவரை கொடுத்தார். பொதுவாகவே முதல் போட்டியில் ஜாம்பவான்கள் கூட தடுமாறுவார்கள் என்ற சூழ்நிலையில் தன்னுடைய அறிமுக போட்டியில் கடைசி ஓவரை வீசிய நூர் அஹமதை எதிர்பார்த்தது போலவே 2, 6 ரன்கள் விளாசிய ஹெட்மயர் எளிதாக போட்டியை முடித்தார்.

- Advertisement -

அதனால் ஏமாற்றடைந்த ரசிகர்கள் 2007 டி20 உலகக்கோப்பை ஃபைனலில் அனுபவமின்றி ரன்களை வாரி வழங்கிய ஜோஹிந்தர் சர்மாவை தைரியமாக பயன்படுத்தி வெற்றி கண்ட தோனியை போல் ஏன் செயல்பட முயற்சிக்கிறீர்கள் என்று பாண்டியாவை கலாய்த்து வருகிறார்கள். என்ன தான் முயற்சித்தாலும் தோனி ஒருவர் மட்டுமே அவரை போல் உங்களால் வர முடியாது என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க:RR vs GT : குஜராத் அணிக்கெதிராக ரிவென்ஞ் கொடுக்க தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் – ஆட்டநாயகன் ஹெட்மயர் மகிழ்ச்சி

அதை விட 2014 ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் 23 விக்கெட்டுகளை எடுத்து ஊதா தொப்பியை வென்ற மோஹித் சர்மா பெரும்பாலும் டெத் ஓவர்களில் அபாரமாக செயல்பட்டு சென்னையின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அப்படிப்பட்ட தரமான அனுபவமான பவுலரை சரியாக பயன்படுத்தாத பாண்டியாவின் கேப்டன்ஷிப்பை விளாசும் ரசிகர்கள் இவர் இந்தியாவை எப்படி வழி நடத்த போகிறாரோ என்று அச்சத்தையும் வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement