RR vs GT : குஜராத் அணிக்கெதிராக ரிவென்ஞ் கொடுக்க தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் – ஆட்டநாயகன் ஹெட்மயர் மகிழ்ச்சி

Hetmyer-2
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியானது தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது.

GT vs RR

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 1777 ரன்களை குவித்தது. பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது முதல் 10 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் மட்டுமே தடுமாறியதால் நிச்சயம் இந்த போட்டியில் தோல்வியடையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோரது அசத்தலான அரைசதம் காரணமாக அந்த அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்து அசாத்தியமான வெற்றியை ருசித்தது. அதிலும் குறிப்பாக சஞ்சு சாம்சங் 32 பந்துகளை சந்தித்து 6 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரி என 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேற அதன் பின்னரும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்த ஹெட்மயர் 26 பந்துகளை சந்தித்து 5 சிக்சர் மற்றும் இரண்டு பவுண்டரி என 56 ரன்களை குவித்து தங்களது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

Hetmyer 1

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருது பெற்ற ஹெட்மயர் தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசுகையில் கூறியதாவது : சொல்வதற்கு என்னிடம் வார்த்தை இல்லை. குஜராத் அணிக்கு எதிராக வெற்றி பெறுவது சவாலான ஒன்று. ஏற்கனவே மூன்று முறை கடந்த ஆண்டு அவர்கள் எங்களை தோற்கடித்துள்ளனர்.

- Advertisement -

இம்முறை அவர்களுக்கு எதிராக இந்த வெற்றியின் மூலம் நாங்கள் ரிவென்ஞ் எடுத்துள்ளோம். இதுபோன்ற கடினமான சூழ்நிலையில் பேட்டிங் செய்யத்தான் நான் அதிக அளவு பயிற்சி எடுத்து வருகிறேன். அந்த வகையில் இன்றைய போட்டியில் நாங்கள் இக்கட்டான நிலையில் இருந்தாலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.

இதையும் படிங்க : வீடியோ : ஷமியின் வேகத்தில் டக் அவுட்டானாலும் ஸ்ரேயாஸ் ஐயர், தோனியை முந்திய ஜோஸ் பட்லர் – தனித்துவமான ஐபிஎல் சாதனை

கடைசி ஓவரை நூர் முகமது வீச வந்ததும் நான் மேலும் உற்சாகமாகி விட்டேன். முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தே ஆக வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் முதல் பந்தில் டபுள் கிடைத்தது அதனை தொடர்ந்து சிக்சருடன் போட்டியை முடித்தேன் என ஹெட்மயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement