செட்டப் மாற்றியும் கொஞ்சம் கூட மாறல – இங்கிலாந்தை கலாய்க்கும் ரசிகர்கள், எதற்கு தெரியுமா?

Ben Stokes ENG vs NZ
Advertisement

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் கடந்த 2021இல் இதே இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியாவை தோற்கடித்து வரலாற்றின் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற வலுவான நியூசிலாந்தை இங்கிலாந்து எதிர்கொள்கிறது.

ENg vs NZ Kane Williamson Ben Stokes

மேலும் அந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்பாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை 1 – 0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து கோப்பையை வென்ற நியூசிலாந்து 22 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது.

- Advertisement -

எனவே அப்படிப்பட்ட வலுவான அதேசமயம் கடந்த வருடம் வரலாற்று தோல்வியை பரிசளித்த நியூசிலாந்துக்கு இந்த முறை தோல்வியை பரிசளித்து தக்க பதிலடி கொடுத்து பழிதீர்க்க இங்கிலாந்து தயாராகியுள்ளது. அதற்கேற்றார் போல் கடந்த 2017 முதல் கேப்டனாக பொறுப்பேற்ற வெற்றிகளுக்கு சமமான தோல்வியை கண்ட ஜோ ரூட் இம்முறை கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

புதிய செட்டப்:
அதன் காரணமாக நட்சத்திரம் மற்றும் உலகின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக கருதப்படும் பென் ஸ்டோக்ஸ் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு உறுதுணையாக இதே நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் பிரெண்டன் மெக்கலம் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பொதுவாகவே அதிரடியை விரும்பும் இந்த இருவரும் ஒன்று சேர்ந்ததால் இங்கிலாந்து அட்டகாசமாக செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் தற்போதைய நியூசிலாந்து அணியினர் பற்றி மெக்கல்லம்க்கு நன்றாக தெரியும் என்பதாலும் அனுபமிக்க வெற்றிக் கூட்டணியான ஜேம்ஸ் ஆண்டர்சன் – ஸ்டுவர்ட் ப்ராட் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு திரும்பியதாலும் இந்த போட்டியில் வெற்றி உறுதி என அந்நாட்டு ரசிகர்கள் நம்பினர்.

- Advertisement -

அப்படி கேப்டன், பயிற்சியாளர் என மொத்த தலைமையும் மாற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது புதிய பயணத்தை இந்த தொடரின் வாயிலாக இங்கிலாந்து துவங்கியுள்ளது. அந்த நிலைமையில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 2-ஆம் தேதி துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. ஆனால் இங்கிலாந்தின் அதிரடியான வேகப்பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாத அந்த அணி முதல் இன்னிங்சில் வெறும் 132 ரன்களுக்கு சுருண்டது.

சொதப்பும் இங்கிலாந்து:
டாம் லாதம் 1, வில் யங் 1, கேப்டன் கேம் வில்லியம்சன் 2, டேவோன் கான்வே 3 என நியூசிலாந்தின் டாப் 4 பேட்ஸ்மேன்களும் இங்கிலாந்தின் தரமான ஸ்விங் பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பிய நிலையில் டார்ல மிட்சேல் 13, டாம் ப்ளான்டால் 14 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் அவுட்டாகி ஏமாற்றினார்கள். இறுதியில் அந்த அணிக்கு அதிக பட்சமாக கோலின் டீ கிரான்ஹோம் 42* ரன்களும் டிம் சவுத்தி 26 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் இளம் மாட்டி போட்ஸ் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

அதனால் வெற்றி ஆரம்பத்திலேயே உறுதியாகி விட்டதாக நினைத்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி – லீஸ் ஆகியோர் கொண்ட தொடக்க வீரர்கள் 59 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அதில் கிராவ்லி 43 ரன்களிலும் லீஸ் 25 ரன்களிலும் அவுட்டாக அடுத்து வந்த ஓலி போப் 7, ஜோ ரூட் 11, ஜானி பேர்ஸ்டோ 1, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 1 என நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்தின் பதிலடி பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

- Advertisement -

கலாய்க்கும் ரசிகர்கள்:
அதனால் 59/0 என நல்ல நிலையில் இருந்த இங்கிலாந்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் 116/7 என திடீரென சொதப்பி 16 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதனால் கேப்டன் பயிற்சியாளர் என அனைவரையும் மாற்றிய போதிலும் கொஞ்சம் கூட இங்கிலாந்து முன்னேறவில்லை என்று பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அந்த அணியை கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட அழைத்த இங்கிலாந்து கோச் – மொயின் அலி அளித்த பதில்

அதிலும் ஐபிஎல் போன்ற டி20 தொடரில் பயிற்சியாளராக செயல்பட்டு திடீரென டெஸ்ட் போட்டிக்கு பயிற்சியாளராக செயல்படும் பிரண்டன் மெக்கல்லம் இங்கிலாந்துக்கு பொறுமையாக விளையாட வேண்டுமென சொல்லித் தரவில்லை போல என்று ரசிகர்கள் அவரையும் சேர்த்து கலாய்கின்றனர்.

Advertisement