சென்னைக்கு விலை போனார்களா அம்பயர்கள்? முக்கிய முடிவை கலாய்க்கும் மும்பை ரசிகர்கள் – சிஎஸ்கே ரசிகர்கள் பதிலடி

- Advertisement -

அனல் பறந்து வரும் 2023 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 41வது லீக் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை தோற்கடித்த பஞ்சாப் தங்களுடைய 5வது வெற்றியை பதிவு செய்தது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு 200/4 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் டேவோன் கான்வே அதிரடியாக 92* (52) ரன்களும் ருதுராஜ் கைக்வாட் 37 (31) ரன்களும் எடுத்தனர். அதை துரத்திய பஞ்சாப் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் 28 (15) பிரப்சிம்ரன் சிங் 42 (24) என தொடக்க வீரர்கள் அதிரடியான ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த அதர்வா டைட் 13 (17) ரன்களில் ஆட்டமிழந்தாலும் லியம் லிவிங்ஸ்டன் அதிரடியாக 40 (24) ரன்களும் சாம் கரண் 29 (20) ரன்களும் எடுத்து முக்கிய நேரத்தில் அவுட்டானார். இருப்பினும் அப்போது களமிறங்கிய ஜிதேஷ் சர்மா அதிரடியாக 2 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்டு வெற்றிக்கு போராடினார். ஆனால் துஷார் தேஷ்பாண்டே வீசிய 19வது ஓவரின் 4வது பந்தில் அவர் பறக்க விட்ட அதிரடியான சிக்சரை பவுண்டரி எல்லையில் சப்ஸ்டிடியூட் வீரராக செயல்பட்ட தமிழகத்தின் ஷாய்க் ரசித் கேட்ச் பிடித்தார்.

- Advertisement -

விலை போன அம்பயர்கள்:
இருப்பினும் பேலன்ஸ் செய்ய முடியாமல் தடுமாறிய அவர் பவுண்டரி எல்லையை உரசியது போல் சென்றதால் 3வது நடுவர் அதை சோதித்தார். அப்போது அவருடைய வலது கால் கிட்டத்தட்ட பவுண்டரி எல்லையை உரசுவது போல் சென்றது. இருப்பினும் சுதாரித்த அவர் ஒரு சில நூலிழை வித்தியாசத்தில் தன்னுடைய கால்களை உள்ளே இழுத்துக் கொண்டதால் 3வது நடுவர் அதை அவுட் என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து வந்த சிக்கந்தர் ராசா சிறப்பாக விளையாடி 13* (7) ரன்கள் குவித்து கடைசி பந்தில் பஞ்சாப்புக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

அதனால் பரிதாபமாக தோற்ற சென்னை சார்பில் அதிகபட்சமாக துஷார் தேஷ் பாண்டே 3 விக்கட்டுகளும் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளும் எடுத்து போராடியும்  வெற்றி காண முடியவில்லை. இந்த தோல்வியால் சென்னை ரசிகர்கள் வேதனையில் இருக்கும் நிலையில் அதில் வேலை பாய்ச்சுவது போல் தற்போது சில எதிரணி ரசிகர்கள் இப்போட்டியில் 3வது நடுவரை விலைக்கு வாங்கியதாக விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

அதாவது அந்த கேட்ச் பிடித்த புகைப்படத்தை பெரிதுபடுத்தி காட்டும் எதிரணி ரசிகர்கள் சாய்க் ரசித் கால் நன்றாகவே பவுண்டரி எல்லையை தொட்டதால் அது அவுட் என்று உறுதியாக சமூக வலைதளங்களில் தெரிவிக்கிறார்கள். அதிலும் சிலர் அந்த இடத்தில் பவுண்டரி எல்லைக்குள் அமர்ந்திருந்த பந்தை எடுத்துக் கொடுக்கும் சிறுவன் கொடுத்த ரியாக்சன் தான் அதற்கு சாட்சி என்றும் கூறுகிறார்கள்.

அத்துடன் ஏற்கனவே கடந்த போட்டியில் ராஜஸ்தானிடம் தோற்ற சென்னை சொந்த ஊரில் நடைபெற்ற இந்த போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காக 3வது நடுவரை விலை கொடுத்து வாங்கியதாக சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இது போன்ற தருணங்களில் மும்பை அணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்ட போது அம்பானி நடுவர்களை விலைக்கு வாங்கியதாக கடந்த காலங்களில் சென்னை ரசிகர்கள் கிண்டலடித்துள்ளனர்.

- Advertisement -

அதற்கு பதிலடியாக இப்போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்று சென்னை 3வது நடுவரை விலை கொடுத்து வாங்கியதாக மும்பை ரசிகர்கள் வெளிப்படையாகவே சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள். இருப்பினும் அவருடைய கால் பவுண்டரி எல்லையில் தொடவில்லை என்று சில வீடியோ ஆதாரங்களை நீட்டும் சென்னை ரசிகர்கள் நாங்கள் ஒன்றும் அம்பானி பரம்பரை இல்லை என்று அதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: CSK vs PBKS : பேட்டிங் எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா நாங்க தோக்க இதுதான் காரணம் – தோனி வெளிப்படை

இதைத் தொடர்ந்து தற்போது புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு சரிந்துள்ள சென்னை வெற்றி பாதைக்கு திரும்பும் முயற்சியில் தன்னுடைய அடுத்த போட்டியில் லக்னோவை மே 3ஆம் தேதி எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement