அசத்திய விராட் கோலி, ஒரே ஸ்கோர்கார்டில் ரிப்பீட் பெயர்களால் ரசிகர்கள் வியப்பு – வெற்றியை நோக்கி இந்தியா

Jadeja County Warm Up
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் வரும் ஜூலை 1ஆம் தேதி இந்தியா களமிறங்குகிறது. கடந்த வருடம் விராட் கோலி தலைமையிலான இந்தியா ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தற்போது நடைபெறப்போகும் இந்த தொடரின் கடைசி போட்டியில் வென்று 15 வருடங்களுக்கு பின் தொடரை வெல்வதற்கு இந்தியாவும் அதற்கு சவாலாக தொடரை சமன் செய்வதற்கு இங்கிலாந்தும் போராட உள்ளதால் இப்போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து படைக்க காத்திருக்கிறது.

இப்போட்டிக்கு தயாராகும் வகையில் லீசெஸ்டர்ஷைர் கவுண்ட்டி அணிக்கு எதிராக 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் இந்தியா பங்கேற்று வருகிறது. ஜூன் 23இல் துவங்கிய அப்போட்டியில் அனைத்து வீரர்களும் பயிற்சி எடுக்கும் வகையில் தரமான வீரர்களை பற்றாக்குறையாக கொண்டிருந்த லீசெஸ்டர் அணிக்காக ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்னா, ரிஷப் பண்ட், புஜாரா ஆகிய 4 இந்திய வீரர்கள் களமிறங்கியது ஆச்சரியமாக இருந்தது. அதைத்தொடர்ந்து துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் இன்னிங்சில் 246/8 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

- Advertisement -

வெற்றியை நோக்கி இந்தியா:
கேப்டன் ரோகித் சர்மா 25, சுமன் கில் 21, ஹனுமா விஹாரி 3, ஷ்ரேயஸ் ஐயர் 0, ரவீந்திர ஜடேஜா 13 என முக்கியமான பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 81/5 என தடுமாறிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக அற்புதமாக பேட்டிங் செய்த விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் 70* ரன்கள் எடுத்து காப்பாற்றினார். அவருடன் விராட் கோலி 33 ரன்கள், உமேஷ் யாதவ் 23 ரன்கள், முகமது சமி 18* ரன்கள் எடுத்தனர். லீசெஸ்டர்ஷைர் சார்பில் அதிகபட்சமாக ரோமன் வால்க்கர் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த லீசெஸ்டர்ஷைர் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. புஜாரா உட்பட அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் காப்பாற்றும் வகையில் பேட்டிங் செய்த இந்திய வீரர் ரிஷப் பண்ட் 76 ரன்கள் எடுத்து அசத்தினார். அவருடன் ரிசி பட்டேல் மற்றும் ரோமன் வால்க்கர் தலா 34 ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக சமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

அதை தொடர்ந்து 2 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3-வது நாள் முடிவில் 364/9 ரன்கள் எடுத்து 366 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. ஸ்ரீகர் பரத் 43, சுப்மன் கில் 38, ஹனுமா விஹாரி 20, ஷார்துல் தாகூர் 28 ரன்கள் எடுத்தனர். இன்றைய 4-வது நாளில் டிக்ளேர் செய்து 10 விக்கெட்டுகள் எடுத்தால் வெல்லலாம் என்பதால் இப்போட்டியில் இந்தியா வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

அசத்திய விராட்: இப்போட்டியில் சுமாரான பார்மில் திண்டாடிக் கொண்டிருக்கும் நட்சத்திர வீரர் விராட் கோலி முதல் இன்னிங்சில் இந்தியா தடுமாறியபோது 33 ரன்கள் 2-வது இன்னிங்ஸ்சில் 67 ரன்கள் என மொத்தம் 100 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். அதுவும் 2-வது இன்னிங்சில் ஜஸ்பிரித் பும்ராவை அவர் சிக்ஸர் அடித்த விதம் ஓரளவு நல்ல பார்முக்கு திரும்பி விட்டதாக காட்டியது. இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அதன் கால சூழ்நிலையில் விராட் கோலி இப்படி நல்ல ரன்கள் அடித்தது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

- Advertisement -

வந்துகொண்டே இருப்பேன்:
அதைவிட இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் வெறும் 13 ரன்களுக்கு அவுட்டான ரவீந்திர ஜடேஜா 2-வது இன்னிங்ஸில் டக் அவுட்டாகி ஏமாற்றமடைந்தார். ஆனால் அவரைப் போன்ற முக்கியமான வீரர் ஃபார்முக்கு திரும்ப வேண்டியது முக்கியம் என்ற காரணத்தால் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது. அதனால் அதே இன்னிங்சில் மீண்டும் களமிறங்கிய அவர் அற்புதமாக பேட்டிங் செய்து 10 பவுண்டரியுடன் 56* ரன்களை விளாசி பார்முக்கு திரும்பியுள்ளார்.

இது பயிற்சி போட்டி என்பதால் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் களமிறங்கலாம் என்ற விதி முறைப்படி அவரது பெயர் ஒரே ஸ்கோர்கார்டில் 2 முறை இடம் பெற்றுள்ளது ரசிகர்களை வியக்க வைத்தது. அவரை போலவே முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான ஸ்ரேயாஸ் அய்யர் 2-வது இன்னிங்சில் முதலில் 32 ரன்களுக்கு அவுட்டானாலும் மீண்டும் களமிறங்கி 62 ரன்களை எடுத்ததால் அவரின் பெயரும் 2 முறை ஒரே ஸ்கோர்கார்டில் இருந்தது.

இதையும் படிங்க : IND vs IRE : இவருக்கு மட்டுமல்ல. புதிய 2 வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு உண்டு. ஹின்ட் கொடுத்த – ஹார்டிக் பாண்டியா

மாறிமாறி புஜாரா: அத்துடன் முதல் இன்னிங்சில் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக களமிறங்கி டக் அவுட்டான முக்கிய வீரர் புஜாரா 2-வது இன்னிங்சில் இந்தியாவுக்காக களமிறங்கியது ஆச்சரியமாக அமைந்தது. ஆனால் 2-வது இன்னிங்சிலும் அவர் 22 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

Advertisement