வீடியோ : இவர் இப்டில்லாம் அடிப்பாரா? வித்யாசமாக அந்நியனாக பேட்டிங் செய்த ரகானே – பீட்டர்சன், சேவாக் வியப்பு

Ajinkya Rahane Ramp
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பரபரப்பான போட்டிகளுடன் மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 33வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக ததாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அதிரடி சரவெடியாக செயல்பட்டு 20 ஓவர்களில் 235/4 ரன்கள் விளாசி இந்த சீசனில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 35 (20) ரன்களும் டேவோன் கான்வே 4 பவுண்டரி 3 சிக்சருடன் 56 (40) ரன்களும் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

அதை அப்படியே அடுத்ததாக 3வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மேலும் வலுப்படுத்திய சிவம் துபே 4 பவுண்டரி 3 சிக்சருடன் 51 (21) ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். ஆனால் அவருடன் மறுபுறம் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே சரவெடியாக விளையாடிய ரகானே அரை சதமடித்து 6 பவுண்டரி 5 சிக்சருடன் 71* (29) ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அவருடன் ஜடேஜா 18 (8) ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக கெஜ்ராலியா 2 விக்கெட்கள் எடுத்தார்.

- Advertisement -

வியக்க வைக்கும் ரகானே:
அதை தொடர்ந்து 236 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு ஜெகதீசன் 1 (3) சுனில் நரேன் 0 (3) என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக வெங்கடேஷ் ஐயர் 20 (20), நிதிஷ் ராணா 27 (20) என அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் மிடில் ஆர்டரில் ஜேசன் ராய் அதிரடியாக 61 (26) ரன்களும் ரிங்கு சிங் 53* (33) ரன்கள் எடுத்தும் ரசல் அதிரடி காட்ட தவறியதால் 20 ஓவர்களில் 186/8 ரன்களுக்கு கொல்கத்தாவை மடக்கிய சென்னை 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

பந்து வீச்சில் துஷார் டேஷ்பாண்டே, தீக்சனா ஆகியோர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். முன்னாதாக இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ரகானே யாருமே எதிர்பாராத வகையில் சூரியகுமார் யாதவ், ஏபி டீ வில்லியர்ஸ் போல திடீரென பின்பக்க திசையில் திரும்பி அடித்து சில ஷாட்டுகளை முயற்சித்தார். அந்த முயற்சிகளின் பலனாக சூரியகுமார் யாதவ் போல வலது பக்கம் ஒதுங்கி வந்து இடது பக்கத்தில் அதிரடியான பவுண்டரியை பறக்க விட்ட அவர் வித்யாசமான ஷாட்டை அடித்து அரை சதமடித்தார்.

- Advertisement -

அதை விட கெஜ்ரொலியா வீசிய 18வது ஓவரில் ஒய்ட் போல் வந்த ஒரு பந்தை அப்படியே ஏபி டீ வில்லியர்ஸ் போல கொஞ்சம் கூட திரும்பாமல் பேட்டை மட்டும் இடது பக்கமாக திருப்பி தேர்ட் மேன் திசைக்கு மேல் அவர் பறக்க விட்ட பவுண்டரி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. குறிப்பாக அதை நேரலையில் வர்ணனை செய்த முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் “இவர் இதை எப்படி அடித்தார்” என்று வியப்பில் 2 – 3 முறை பாராட்டியதுடன் தொடர்ந்து இதே போல விளையாடி எங்களை மகிழ்விக்குமாறு ட்விட்டரிலும் மனதார பாராட்டினார்.

அது மட்டுமல்லாமல் மிட் விக்கெட் திசையில் அடித்த சிக்சர் உட்பட இந்த போட்டியில் அவர் அடித்த ஒவ்வொரு ஷாட்டுகளும் கொஞ்சம் கூட தடுமாற்றம் இல்லாமல் தெளிவாக அழகாக இருந்தது. அப்படி அவர் அடித்த வித்தியாசமான ஷாட்களை பார்த்து சேவாக், இயன் பிஷப் போன்றை நிறைய முன்னாள் வீரர்கள் இவரால் கூட இப்படி அடிக்க முடியுமா என்று தங்களது வியப்பை ட்விட்டரில் வெளிப்படுத்தி பாராட்டியுள்ளனர்.

ஏனெனில் பொதுவாகவே சற்று மெதுவாக விளையாட கூடிய டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் அவர் சமீப காலங்களில் தடுமாற்றமாக செயல்பட்டதால் இந்திய அணியிலும் ஐபிஎல் தொடரிலும் கழற்றி விடப்பட்டார். ஆனாலும் இந்த சீசனில் தன்னை வெறும் 50 லட்சத்துக்கு நம்பி வாங்கிய சென்னைக்கு 61 (27), 31 (19), 37 (20), 9 (10) என ஏற்கனவே அதிரடியாக செயல்பட்ட அவர் இந்த போட்டியில் 71* (29) ரன்களை 244.83 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்று தன்னை கிளாஸ் வீரர் என்பதை நிரூபித்துள்ளார்.

Advertisement